
ஜூலை 02, சென்னை (Cinema News): சீரியலில் நடித்து தமிழக மக்களிடையே பிரபலமான நடிகை அன்ஷிதா, பிக் பாஸ் சீசன் 8 மூலமாக தமிழக மக்களிடையே மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். தனியார் தொலைக்காட்சிகளில் பல தொடர்களிலும், ஓடிடி குறும்படங்களிலும் நடித்துள்ள நடிகை, பிக் பாஸ்-க்கு பின்னர் நல்ல வரவேற்பை பெற்றார். செல்லம்மா சீரியலில் நடிகை என்றால் இவரை பலருக்கும் தெரியும்.
சொந்த வீடு கட்டிய நடிகை:
வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்த நடிகை, தற்போது சொந்த வீடு ஒன்றை நிலம் வாங்கி கட்டியிருக்கிறார். வீட்டின் கிரகப்பிரவேசம் உட்பட நிகழ்ச்சிகளும் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
சொந்த வீட்டில் ஆனந்த கண்ணீருடன் அன்ஷிதா வெளியிட்ட வீடியோ :
View this post on Instagram