TTF Vasan Marriage (Photo Credit : Instagram)

செப்டம்பர் 17, சென்னை (Chennai News): சமூக வலைதளங்களில் இருசக்கர வாகனம் தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் டிடிஃஎப் வாசன் (TTF Vasan). பைக் ரைடிங் வீடியோக்கள் மூலமாக பிரபலமானவர் பின் நாட்களில் விதிகளை மீறியதாக சர்ச்சையில் சிக்கினார். இதனை தொடர்ந்து இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டது. ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்தவரின் பேச்சு விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், இவருக்கென உண்டாகிய ரசிகர் பட்டாளம் செய்த வம்புக்காக சிறைக்கும் சென்று வந்தார்.

டிடிஎஃப் வாசன் திருமணம் குறித்த அப்டேட் :

 

View this post on Instagram

 

A post shared by Vaikuntha vasan (@vasan__enfielder)

டிடிஎஃப் வாசனுக்கு திடீர் திருமணம் :

சமீப காலமாகவே திரைத்துறையில் கவனம் செலுத்தி வந்த டிடிஎஃப் வாசன் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வந்தார். இதனிடையே தற்போது அவர் திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி பலரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "கடந்த ஐந்தாண்டுகளாக நான் எனது மாமன் மகளை காதலித்து வந்தேன். நேற்று திடீரென அவள் எனக்கு தொடர்பு கொண்டு நமது காதல் வீட்டுக்கு தெரிந்து விட்டது. நான் உன்னுடன் வந்துவிடுகிறேன் என்று கூறி கிளம்பி வந்துவிட்டார். நான் மூன்று மாதம் பொறுத்து இருக்குமாறு கூறினேன்.

டிடிஎஃப் வாசன் திருமண புகைப்படம் வைரல் :

 

View this post on Instagram

 

A post shared by Vasan Enfielder (@immortal_ttf__)

டிடிஎஃப் வாசனுக்கு குவியும் வாழ்த்துக்கள் :

படம் வெளியானதும் மாமாவிடம் பெண் கேட்டு வருவதாகவும் கூறினேன். ஆனால் சூழ்நிலை காரணமாக அவர் வந்துவிட்டதாக கூறினார். இதனால் எனக்கு நாளை திருமணம் ஆகிவிடும் என நினைக்கிறன். என் அத்தையிடம் இது தொடர்பாக கூறிவிட்டேன். மாமாவிடம் தான் கூறவில்லை. எனது சிறுவயதில் அப்பா இறந்த பின்னர், தாய் மாமா தான் எங்களது குடும்பத்துக்கு துணையாக இருந்தார். அவரிடம் சொல்லாமலேயே திருமணம் செய்வது வருத்தமாக இருக்கிறது" எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அவருக்கு திருமணம் ஆனது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து பரவி வருகின்றன. இதனால் டிடிஎஃப் வாசனுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் டிடிஎப் வாசனை விமர்சித்தும் வருகின்றனர்.

இணையத்தில் வெளியான திருமண போட்டோசூட் வீடியோ :

 

View this post on Instagram

 

A post shared by Vasan Enfielder (@immortal_ttf__)