Thama Movie Teaser (Photo Credit: @MovieUpdate58 X)

ஆகஸ்ட் 20, சென்னை (Cinema News): பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), 'சிக்கந்தர்' மற்றும் 'குபேரா' படங்களைத் தொடர்ந்து, தற்போது தி கேர்ள் ஃப்ரெண்ட், மைசா, தமா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில், 'தமா' (Thama Movie) திரைப்படத்தின் டீசர் நேற்று (ஆகஸ்ட் 19) வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, நவாசுதீன் சித்திக், பரேஷ் ராவல் ஆகியோருடன் சேர்ந்து ராஷ்மிகா மந்தனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். Bigg Boss Tamil Season 9: ரெடியா மக்களே! விஜய் டிவி-யின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9.. தொகுப்பாளர் இவர்தான்..!

தமா திரைப்படம்:

ஆதித்யா சர்போதார் இயக்கியுள்ள இப்படம், காதல், நகைச்சுவை கலந்த ஒரு திகிலூட்டும் மர்மம் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. தமா திரைப்படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ள 'மைசா' படத்தின் டிரெய்லர் கடந்த மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமா - டீசர் வெளியீடு: