ஜனவரி 07, கோடம்பாக்கம் (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (Ajith Kumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஒரே வருடத்தில் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. முதலில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில், திடீரென படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் தள்ளி வைத்தது. AR Rahman: ஆஸ்கர் நாயகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.. நன்றி கூறிய ஏ.ஆர்.ரகுமான்..!
குட் பேட் அக்லி:
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இணைந்துள்ளார். தொடர்ந்து ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. சமீபத்தில், இந்த படத்தில் நடிகர் பிரசன்னா நடிக்கின்றார் என அவரே கூறியுள்ள நிலையில் படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கையில் துப்பாக்கியுடன் மாஸ் கெட்டப்பில் அஜித்தின் புகைப்படத்துடன் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதே தேதியில் தனுஷின் இட்லிகடை திரைப்படமும் திரைக்கு வரவுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் நித்யா மேனன், ராஜ் கிரண் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அந்தவகையில் தனுஷ் மற்றும் அஜித் இருவரும் நேரடியாக களத்தில் மோதிக்கொள்ள உள்ளனர்.
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு:
#GoodBadUgly arrives on April 10th❤️🙏🏻 @MythriOfficial @SureshChandraa pic.twitter.com/K6N1x7uANT
— Adhik Ravichandran (@Adhikravi) January 6, 2025