Actor Allu Arjun with Rana Daggubati (Photo Credit: @ANI X)

டிசம்பர் 14, ஹைதராபாத் (Cinema News): சுகுமார் இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun), ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்து, கடந்த 05 டிசம்பர் 2024 அன்று புஷ்பா படத்தின் (Pushpa 2: The Rule) இரண்டாவது பாகம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான புஷ்பா 2 திரைப்படம், புஷ்பா 1 (Pushpa: The Fire) படத்தின் தொடர்ச்சியாக இருந்தது. ஆந்திர வனப்பகுதியில் நடைபெறும் செம்மரக்கடத்தல், அது சார்ந்த அரசியல், ரவுடியிசம் ஆகியவற்றை மையப்படுத்தி படத்தின் கரு நகர்த்தப்பட்டு இருந்தது.

ரூ.1000 கோடி வசூல் சாதனை:

புஷ்பா 2 திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல மொழிகளில் வெளியிடப்பட்டு, படத்தின் வசூல் ரூ.1000 கோடியை கடந்தது. 2024ம் ஆண்டின் இறுதியில் வெளியான இப்படம், விரைந்து ரூ.1000 கோடி வசூலை சந்தித்தது. இப்படத்தின் சிறப்புக்காட்சி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், சந்தியா தியேட்டரில் பதிவு செய்யப்பட்டது.

சிறப்புக்காட்சியில் பெண் பலி:

இந்த காட்சிக்கு நடிகர் அல்லு அர்ஜுனும் வருகை தந்திருந்த நிலையில், அவரை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். அல்லு அர்ஜுனின் மீது கொண்ட ஆவல் காரணமாக இளம்பெண் ஒருவர் தனது கணவரை வற்புறுத்தி டிக்கெட் வாங்கி, குழந்தையுடன் படத்தை பார்க்க வந்தார். அங்கு ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கியவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மகன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். Radhika Apte: பெண் குழந்தையை பெற்றெடுத்த ரஜினி பட நடிகை... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.! 

அல்லு அர்ஜுன் கைது:

இந்த தகவல் அறிந்த அல்லு அர்ஜுன் பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தார். மேலும், சிறுவனின் சிகிச்சை செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். பெண்ணின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திரையரங்கு நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். மேலும், நடிகர் அல்லு அர்ஜுனையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து, நேற்று சிக்கடப்பள்ளி காவல்துறையினர் அல்லு அர்ஜுனை கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு:

தொடர்ந்து அவர் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, நம்பள்ளி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நீதிபதிகள் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுமதி வழங்கினர். இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கேட்டு விண்ணப்பித்து பலனில்லை. நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று நீதிமன்ற நடவடிக்கைக்கு பின்னர் சஞ்சல்குடா (Chanchalguda Prison) சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

பிணையில் விடுதலை:

இந்நிலையில், அல்லு அர்ஜுனுக்கு ஜாமின் வேண்டி தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. நேற்று இரவே அல்லு அர்ஜுன் பிணையில் வெளியே கொண்டு வரப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காவல்துறை அதிகாரிகள் இன்று காலை பிணையின் நகலைப் பெற்று, அவரை விடுவித்தனர். காவல்துறை அதிகாரிகளின் சட்டரீதியான செயலுக்கு அல்லு அர்ஜுனின் வழக்கறிஞர்களின் தரப்பும் தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது. மேலும், சட்டரீதியான போராட்டத்தை தொடருவோம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்பிரபலங்கள் சந்திப்பு:

சொந்த ஜாமினில், ரூ.50 ஆயிரம் பாண்டு செலுத்தி வெளியே வந்த நடிகர் அல்லு அர்ஜுனை, தெலுங்கு சினிமா திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். பிரபல தெலுங்கு நடிகரும், அல்லு அர்ஜுனின் நெருங்கிய நண்பருமான ராணா டகுபதி, நேரில் சந்தித்து அல்லு அர்ஜுனை கட்டிபிடித்து ஆறுதல் தெரிவித்தார்.

பிணையில் விடுதலையான பின்னர் அல்லு அர்ஜுன் - நடிகர் ராணா டகுபதி சந்தித்துக்கொண்ட காணொளி: