ஜூலை 18, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் வேலு பிரபாகரன் (வயது 68) இன்று காலமானார். இவர், 1980ஆம் ஆண்டு வெளிவந்த ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’ என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் நுழைந்தார். இதனையடுத்து, 1989ஆம் ஆண்டு வெளியான 'நாளைய மனிதன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். Riythvika Engagement: பிக்பாஸ் புகழ் ரித்விகாவிற்கு விரைவில் திருமணம்.. நிச்சயதார்த்த கிளிக்ஸ் வைரல்.!
இயக்குநர் வேலு பிரபாகரன்:
இதனைத்தொடர்ந்து பிக்பாக்கெட், உருவம், உத்தமராசா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார். இதன்பின்னர் புதிய ஆட்சி, அசுரன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை எழுதி இயக்கியுள்ளார். கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், பீட்சா 3, ரெய்டு, கஜானா போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
வேலு பிரபாகரன் மறைவு:
இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு வெண்டிலேட்டர் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (ஜூலை 18, 2025) காலை 5.30 மணிக்கு அவர் காலமானார். இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் வேலு பிரபாகரன் (Velu Prabhakaran) மறைவு செய்தி திரைத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.