Balaji Murugadoss (Photo Credit: @OfficialBalaji X)

பிப்ரவரி 20, சென்னை (Cinema News): பிக் பாஸ் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் (Bigg Boss Tamil Balaji Murugadoss), தற்போது ஹீரோவாக நடித்து இருக்கும் ஃபயர் (Fire) படம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆனது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, ரசிகர்கள் சிலர் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்து, படம் சூப்பராக இருப்பதாக தெரிவித்து சென்றனர். Niram Marum Ulagil Trailer: "உயிர்போகும் நேரத்திலும் உச்சரிப்பேன் அம்மா" - பாரதிராஜா, சாண்டி, நடராஜ் நடிப்பில் நிறம் மாறும் உலகில்., படத்தின் ட்ரைலர் இதோ.!

நடிகர் பாலாஜி மன்னிப்பு:

இதனையடுத்து, அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனை பார்த்த சென்னை போக்குவரத்து காவல்துறையினர், பைக்கில் சென்ற இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதால், அவர்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். இதற்காக, நடிகர் பாலாஜி மன்னிப்பு கேட்கிறார். மேலும், நான் அபராதம் செலுத்துகிறேன் என எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீடியோ இதோ:

அபராதம் விதித்த சென்னை போக்குவரத்து காவல்துறை: