Bigg Boss Tamil Season 8 | Day 102 Promo (Photo Credit: @VijayTelevision X)

ஜனவரி 16, ஈவிபி பிலிம் சிட்டி (TV News): விஜய் (Vijay TV) டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி, 102 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் இன்னும் சில நாட்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், வெற்றியை நோக்கிய பயணத்தில் ஜாக்குலின், முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி, மஞ்சரி, ராணவ், அருண், தீபக் ஆகியோர் வீட்டில் இருந்து எவிக்சன் முறையில் வெளியேறி இருக்கின்றனர். Saif Ali Khan: பிரபல நடிகரை கத்தியால் குத்திய திருடன்.. வீட்டில் புகுந்து பகீர் செயல்.. மருத்துவமனையில் அனுமதி.! 

விஜே விஷால் (VJ Vishal Bigg Boss Tamil) கொடுத்த அதிர்ச்சி:

பழைய போட்டியாளர்களை மீண்டும் இல்லத்திற்குள் அனுப்பி வைத்து, போட்டி மாறுபட்ட கோணத்தில் செல்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் இறுதிப்போட்டி நடக்கவுள்ள நிலையில், மணி டாஸ்க் (Money Box Task Bigg Boss Tamil) முறையில் போட்டியாளர்கள் ஆட்டத்தை விறுவிறுப்புப்படுத்தியுள்ளனர். முத்துக்குமரன் பணப்பெட்டி தொடர்பான அறிவிப்பு வெளியிட்டதும், 15 நொடியில் 30 மீட்டர் தூரத்தை கடந்து ரூ.50000 பணத்தை முதற்கட்டமாக பெற்றார். அதனைத்தொடர்ந்து ரயான் ரூ.2 இலட்சம் பணப்பெட்டியை பெற்றுக்கொண்ட நிலையில், சௌந்தர்யா அம்முயற்சியை பாதியில் கைவிட்டு, பணத்தை எடுக்காமல் தனது இருப்பை வீட்டுக்குள் உறுதி செய்தார். இதனிடையே, இன்று விஜே விஷால் 60 மீட்டர் தூரம் கொண்ட மணி டாஸ்கில் பங்கேற்று இருக்கிறார். அவர் வெற்றி அடைந்தாரா? என்பது பின்னர் தெரியவரும். தற்போது அதுதொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும், இந்த போட்டியில் தோல்வி அடைந்த ஜாக்குலின் (Jacqualine Bigg Boss Tamil), பிக் பாஸ் வீட்டில் இருந்து, போட்டியின் விதிமுறைப்படி வீட்டில் இருந்து மிட்வீக் எவிக்சன் முறையில் வெளியேறி இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

விஜே விஷால் நேரத்திற்குள் வந்தாரா? பரபரப்பு காட்சிகளுடன் பிக் பாஸ் தமிழ் ப்ரோமோ: