Bigg Boss Tamil Season 8 | Day 15 Promo (Photo Credit: @VijayTelevision X)

அக்டோபர் 21, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். YouTuber Irfan: குழந்தையின் தொப்புள்கொடி துண்டிக்கப்படும் வீடியோ; அடுத்த சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்பான்.! 

முக்கியப்புள்ளிகள் வெளியேற்றப்பட்டனர்:

முதல் நாளே எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட சாச்சனா, மீண்டும் 4வது நாளிலேயே உள்ளே வந்தார். முதல் வாரத்தின் முதல் எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். இரண்டாவது வாரத்தில் அர்னவ் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக் பாஸ் ஆட்டத்தில் இவர்கள் இருவரும் பெரிய புள்ளிகளாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த வாரங்களில் மக்களின் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறி இருக்கின்றனர். தொடர்ந்து மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற்றது. Arnav Evicted: 'டேய் ஜால்ராஸ்' வாய்ப்பை தவறவிட்ட கடுப்பில் ஆண்கள் அணி மீது பாய்ந்த அர்னவ்; கண்டித்து அனுப்பிய விஜய் சேதுபதி.. விபரம் உள்ளே.! 

மூன்றாவது வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷன்:

அப்போது போட்டியாளர்கள் பலரும் ஜாக்குலின், சத்யா, சவுந்தர்யா ஆகியோரை தங்களின் தனிப்பட்ட காரணங்கள் கூறி நாமினேட் செய்தனர். அதாவது ஜாக்குலின் பிறரின் பிரச்சனையில் தலையிட்டு மக்களின் கவனத்தை பெறுவதாகவும், சத்யா அவ்வப்போது போட்டியில் இருந்து காணாமல் போகிறார் என்றும், சவுந்தர்யா எங்கே இருக்கிறார் என்பது கூட தெரியாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பதாகவும், அன்ஷிகா தனது மீது மக்களின் பார்வையை படவைக்க ஒருசில முயற்சிகள் எடுப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், சவுந்தர்யா (Soundarya) போட்டியாளர்களின் கேள்வியால் வருந்தினார். அவர் எதற்காக விளையாட வந்தார் என்பதே பெரும்பாலான பார்வையாளர்களின் கேள்வியாக இருக்கிறது.

போட்டிபோட்டுக்கொண்டு போட்டியாளர்கள் நாமினேட் செய்த பிக் பாஸ் ப்ரமோ இன்று:

சவுந்தர்யா சக போட்டியாளர்களின் கேள்வியால் கண்கலங்கிய காட்சி: