ஜனவரி 11, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி, 97 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், இறுதிக்கட்டத்தை நோக்கிய பயணத்தில் தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி, மஞ்சரி, ராணவ் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். Bigg Boss Tamil Season 8: "அதெல்லாம் எனக்கு செட்டாகாது" - மோதிக்கொண்ட சவுந்தர்யா, ஜாக்குலின்..!
வன்மத்தை கக்கும் பழைய போட்டியாளர்கள்:
பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் 9 நாட்களில் முடிவடையும் நிலையில், 8 பழைய போட்டியாளர்கள் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளனர். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களும், தற்போது வந்தவர்களும் சேர்ந்து பயங்கரமாக சண்டையிட்டு வருகின்றனர். இதில், வெளியே இருந்து வந்த போட்டியாளர்கள் வன்மத்தோடு பேசி வரும் நிலையில், தற்போது வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் மனநிலையைக் குறித்து விஜய் சேதுபதி இன்றைய ப்ரோமோவில் பேசியுள்ளார்.