ஜனவரி 13, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி, 98 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், இறுதிக்கட்டத்தை நோக்கிய பயணத்தில் ஜாக்குலின், முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, விஷால் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி, மஞ்சரி, ராணவ் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.
ரவீந்தர் vs தர்ஷிகா:
பிக் பாஸ் 8 வீட்டில் இருந்த 8 போட்டியாளர்களில் அருண் பிரசாத், தீபக் ஆகியோர் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்கள். இதையடுத்து 6 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். முன்னாள் போட்டியாளர்கள் தொடர்ந்து வீட்டுக்குள் வந்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் தர்ஷிகா வந்திருப்பது தொடர்பான ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. தர்ஷிகாவை பார்த்ததும் பேய் அறைந்தது மாதிரி நின்றார் வி.ஜே. விஷால். அடுத்ததாக ரவீந்தரை சந்திக்க சண்டை வந்துவிட்டது. நான் அவர் பெயரை டேமேஜ் பண்ணல அண்ணா என ரவீந்தரிடம் கூறினார் தர்ஷிகா. Madha Gaja Raja: உடல்நலம் தேறினார் விஷால்; மனோபாலா, சந்தானத்தின் காமெடி டாப்.. மதகஜராஜா விமர்சனம்.!
"எதுக்காகமா எல்லோரும் விஷாலை அடிக்கிறாங்க. நீ வெளியில ஒன்னு பண்ண, அதான் அடிக்கிறாங்க" என்றார் ரவீந்தர். அதை கேட்ட தர்ஷிகா, "எனக்கு தெரியும் நான் என்ன செய்தேன் என்று. எனக்கு கூட இருக்கிறவங்களுக்கு தெரியும். என் வாழ்க்கையில் தலையிடாதீங்க" என கத்தினார். து எனக்கும், அவனுக்கும் இடையே இருப்பது என தர்ஷிகா சொல்ல உன் டிராமா வேண்டாம் என்கிட்ட என்றார் ரவீந்தர். உங்க டிராமாவை விடவா என கத்திவிட்டு இடத்தை காலி செய்தார் தர்ஷிகா.