
பிப்ரவரி 28, மும்பை (Cinema News): பிரபல பாலிவுட் தம்பதிகளான கியாரா அத்வானி (Kiara Advani) மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா (Sidharth Malhotra) ஆகியோர் தங்கள் முதல் குழந்தையின் பிறப்பு (Pregnancy) குறித்து அறிவித்துள்ளனர். இன்று (பிப்ரவரி 28) இன்ஸ்டாகிராமில் அத்வானி இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டார். Good Bad Ugly Teaser Promo: அஜித் குமாரின் குட் பேட் அக்லீ படத்தின் டீசர் ப்ரோமோ.. லிங்க் உள்ளே.!
மிகப்பெரிய பரிசு:
கியாரா மற்றும் சித்தார்த் ஒரு குழந்தையின் சாக்ஸை வைத்திருக்கும், ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். அதில், “எங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு விரைவில் வருகிறது" என பதிவிட்டுள்ளனர். இவர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி அன்று ஜெய்சால்மரில் உள்ள சூர்யாகர் அரண்மனையில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கியாரா அத்வானி இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram