Trip (Photo Credit: Pixabay)

ஜூன் 24, புதுடெல்லி (New Delhi): செலவில்லாமல் ஊர் சுற்ற, சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் செல்ல பலரும் விரும்புவர். ஆனால் பணப்பற்றாக்குறையால் அதை கைவிட்டும் விடுவர் அல்லது கடன் வாங்கி வெளி இடங்களுக்கு செல்வர். கடன் வாங்கி சுற்றுலா செல்வது நிதி பொறுப்பை இழக்கச் செய்யும். அதனால் இது போன்று சுற்றுலா தலங்களுக்கு செல்வதாக இருந்தால் முன்கூட்டியே பணத்தை சேமித்து வைப்பது நல்லது. கூடவே சில வழிமுறைகளை முறையாக பின்பற்றினால் மகிழ்ச்சியாகவும் நிதிக் கவலையின்றியும் நிம்மதியாக சுற்றுத்தலங்களுக்குச் (Travel Cheaper) சென்று வரலாம்.

சேமிப்பும் பட்ஜெட்டும்: பட்ஜெட் போடுவது எப்போதும் நல்ல பழக்கம். மாத வார செலவு கணக்கில், செலவுகளையும் சேமிப்பையும் கணக்கு போட வேண்டும். சேமிப்பில் பிஸினஸ், கார், வீடு, காப்பீடு, முதலீடு வாங்க என எதுவாயினும் தனித்தனியாக சேமிப்பது நல்லது (Budget Travel). அதோடு பட்ஜெட் போடுவது நிதி ஒழுங்குமுறையைப் பாராமரிக்கும். பட்ஜெட் போட்டு சேமிப்பை தொடங்குங்கள்.

பட்ஜெட்டுக்கு ஏற்ற இடம்: இவ்வழகிய உலகில் பல இடங்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என ஆசை இருக்கும். சில இடங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என விஷ் லிடிஸ்டில்இருக்கும். அதில் உங்களுடைய பட்ஜெட்டிற்குள் எது ஒத்துப்போகுமோ அதை முதலில் தேர்வு செய்து சுற்றுலா மேற்கொள்ளுங்கள். பட்ஜெட்டிற்கு மீறிய இடம் எனில், கடன் வாங்கி செல்லுமாறு இருந்தால் அடுத்த சுற்றுலாவிற்கு செல்லாமல் கடனாளியாக கடன் கட்டிக் கொண்டிருக்க வேண்டி வரும். BWF US Open: யுஎஸ் ஓபன் பேட்மிண்டன்.. இந்தியாவிலிருந்து கலந்துகொள்ளப்போகும் வீரர்களின் விபரம் உள்ளே..!

சீசன் இல்லாத சிறந்த நேரம்: சுற்றுலா செல்ல சிறந்த நேரம் அதன் சீசன் இல்லாத நேரங்கள் தான். அந்த நேரங்களில்  30 சதவீதம் வரை பணத்தை மிச்சப்படுத்த முடியும்.  அதோடு சீசன் அல்லாத நேரத்தில் தான் கூட்டம் குறைவாகவும் அந்த சுற்றுலாத் தலத்தை என்ஞாய் செய்யவும் முடியும். சீசன் நேரங்களில் உணவு, தங்கும் விடுதி  மேலும் சுற்றுலாத் தலத்தின் நுழைவுக் கட்டணம் போன்றவை இரண்டு மடங்காக இருக்கும். அதனால் பணச்செலவு அதிகரிக்கும். இதனால் குறைவான இடங்களை அனுபவங்களை மட்டுமே பெற முடியும்.

முன்கூட்டியே புக்கிங்: நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல நினைப்பவர்கள்,  முன்கூட்டியே பட்ஜெட்டிற்குள் ஏற்ற இடங்களைத் தேர்வு செய்து, போக்குவரத்துக்கான டிக்கெட்டுகளையும், தங்கும் இடங்களையும் முன்கூட்டியே முன்பதிவு செய்வது நல்லது. வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவோர்கள், அதற்கு ஆகும் விமான பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது நல்லது. மேலும் இணையத்தில் அங்கு உள்ள விடுதிகளை முன்பே பார்த்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள். முன்பதிவு செய்யும் போதும் பிற இடங்களுக்கும் நீங்கள் தங்குவதற்கு தேர்ந்தெடுத்த இடத்திற்கும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மேலும் வேறு ஏதெனும் ஆஃபர்கள் இருக்கிறதா எனவும் கவனிக்க வேண்டும்.

பட்ஜெட் போக்குவரத்து: பட்ஜெட் விமானங்களைப் பயன்படுத்துவது பயண செலவுகளை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.  முன்கூட்டியே போக்குவரத்திற்கு டிக்கெட்களை புக் செய்யும் போது குரைவான விலை டிக்கெட்டிகள் கிடைக்கும். ஒரு பெரிய குழுவாக செல்பவர்கள் குறைவான விலையில் கிடைக்கும் வாகனங்களை புக் செய்து கொள்ளலாம். கூடுதலாக சுற்றுலா தலங்களுக்கு செல்லவும், அந்த ஊரில் மக்கள் பயணிக்கும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவது சிறந்ததாகும்.

லைட்வெயிட் பேக்கேஜ்: சுற்றுலாவிற்கு எப்போதும் அதிக எடைக் கொண்ட பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது. குறைவான அளவுள்ள பொருட்களை எடுத்து செல்வது சிறந்தது. லட்கேஜ்கள் அதிகரித்தால் அதற்கு தனியாக போக்குவரத்தில் பணம் செலுத்த வேண்டிவரும். முதுகில் சுமந்து செல்லும் வகையான ஒரு பெரிய பையை மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது.

லோக்கல் ஃபுட்: சுற்றுலா இடங்களுக்கு சென்று விலையுயர்ந்த உணவுகளை வாங்குவதை விட, அங்குள்ள லோக்கல் உணவுகளை வாங்கலாம். இது பணத்தை மிச்சப்படுத்துவதுடன் அங்குள்ள உணவின் சுவையை அறியவும் உதவும். வெளிநாடோ, மாநிலமோ எங்கு சென்றாலும் லோக்கல் உணவு முறைகளை தெரிந்து கொள்ளவது அனுபவங்களையும் நினைவுகளையும் அதிகரிக்க செய்யும். "சோம்பேறிகளாக மாறும் இளைஞர்கள்... விஷச்சாராய மரணத்துக்கு ரூ.10 இலட்சம் வழங்கியது தவறு" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதங்கம்..!

ஆஃப்பர்  ஆர் பேக்கேஜ்: பல நிறுவனங்கள் சுற்றுலாக்கான ஆஃபர்களை அளித்து வருகின்றனர். நீங்கள் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தினால் அதில் அளிக்கும் ஆப்ஃபரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கிரெடிட் கார்டுகள், நிறுவனங்கள், ஹோட்டல்கள், போன்றவைகளும் சலுகைகளை வழங்குகின்றன.  அவைகளை பயன்படுத்தலாம். இருப்பினும் இது அதிகமாக செலவழிக்க வைக்கிறதா அல்லது மிச்சப்படுத்துகிறதா என கணக்கிடுவது அவசியம்.

மேலும் பல சுற்றுலா நிறுவனங்கள் பல சலுகைகளில் பேக்கேஜ் வடிவில் அளிக்கின்றன. இவைகள் இதற்கு முன் செல்லாத டிரக்கிங் இடங்களாக இருந்தாலோ அல்லது வெளிநாட்டுப் பயணங்களாக இருந்தால் மட்டும் பேக்கேஜை தேர்வு செய்ய வேண்டும். சுற்றுலா கைடு நிறுவனங்கள், அவர்களுக்கான கமிஷன் தொகையை பேக்ஜேஜில் சேர்த்து பெற்றுக்கொள்வர். இதனால் குறைவான இடத்தில் செல்லும் சுற்றுலா தலம் கூட சற்று உயர்வாக இருக்க வாய்ப்புள்ளது. பணத்தை கருத்தில் கொண்டு பேக்கேஜை தேர்வு செய்ய வேண்டும்.

பொதுமக்களிடம் விசாரித்தல்: சுற்றுலா செல்லும் இடத்தில் அங்கு வசிக்கும் உள்ளூர் மக்களிடம் பேசி அங்குள்ள பிற இடங்களை அறிந்து கொள்ளலாம். இணையத்திலும், சுற்றுலா கைடுகளைத் தாண்டி சுற்றுலா த்லத்தின் அருகில் இருக்கும் ஹிடன் அழகிய இடங்களை உள்ளூர்வாசிகள் மூலம் அறிந்துகொள்ள முடியும். அவரிகளின் வழிகாட்டுதலை கொண்டு அங்கு சென்று சுற்றுலாவை அழியா அழிகிய நினைவாக மாற்றலாம்.

உள்ளூர் பணப்பரிமாற்றம்: வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் போது, உங்கள் பணத்தை  அந்நாட்டு பணமாக மாற்றி கையில் வைத்துக்கொள்ள வேண்டும். இது போல் பணத்தை மாற்றி பயன்படுத்தும் போது சில கணிசமான தொகையை சேமிக்க முடியும். நம் நாட்டின் பணத்தை நேரடியாக இணையம் மூலம் ஒவ்வொரு முறை அனுப்பும் போதும் அதற்கான சார்ஜ்கள் பிடிக்கப்படும். இதில் சில தொகையை வீணாக்க நேரிடும்.

வெளியூரில் பேரம் பேசலாமே: வெளியூர்களில் சென்றால் அங்குள்ள மக்கள் அதிக விலை கூறி பொருட்களை விற்க அதிக வாய்ப்புள்ளது. அதனால் எங்காயினும் பேரம் பேச வேண்டும். அவர்கள் கூறும் விலையை  அப்படியே கொடுப்பதால் பணம் அதிகமாக வீணாகும். எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குரைத்து கேட்டு வாங்குங்கள்.