ஜனவரி 03, சென்னை (Chennai): சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமணமான தம்பதியில், கணவர் விவாகரத்து வேண்டி மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், "எனக்கும், எனது மனைவிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. மனைவிக்கு திருமணத்தின்போதே கருப்பையில் புற்றுநோய் இருந்துள்ளது. இதனால் அவருக்கு திருமணத்திற்கு பின் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கருப்பை அகற்றப்பட்டுள்ளது.
விவாகரத்து வேண்டி கணவர் கோரிக்கை: கருப்பை அகற்றப்பட்டதன் விளைவாக, அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத சூழல் உருவாகியுள்ளது. இந்த உண்மையை மறைத்து எனக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்கள். நான் திருமண உறவில் இருந்து விடப்பட முயற்சிக்கிறேன். அதற்கு அனுமதி வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.
இன்று தீர்ப்பு: இந்த மனுவை விசாரணை செய்த கீழமை நீதிமன்றம் கணவரின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு ஆர்எம்டி டீக்கா ராமன் மற்றும் நீதிபதி பிபி பாலாஜி ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதன் விசாரணை நிறைவுபெற்று நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர். Andhra Paruppu Podi: எப்போதும் குழம்பு வைத்து சாப்பிட்டு போர் அடிக்குதா?.. ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடி தயாரிப்பது எப்படி?.. விபரம் இதோ.!
விதிக்கு என்ன செய்ய முடியும்?: அந்த தீர்ப்பில், நீதிபதிகள் கணவரின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர். மேலும், நீதிபதிகளின் தீர்ப்பில், "கணவர் கூறியபடி நடந்த மருத்துவ பரிசோதனைகளில், பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பு கர்ப்பப்பை புற்றுநோய் இருந்ததாக உறுதி செய்யப்படவில்லை. அவர் நல்ல உடல்நலத்துடன் இருந்துள்ளார். ஆனால், விதியின் காரணமாக அவருக்கு எதிர்பாராத விதமாக கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.
பிறரின் பேச்சை கேட்டு நடப்பது கணவருக்கு அழகல்ல: இதன் விளைவாகவே கர்ப்பப்பை அகற்றப்பட்டு இருக்கிறது. இந்த ஒரு காரணத்திற்காக, மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதாக எண்ணி விவாகரத்து கோருவது சரியானது இல்லை. தம்பதிகள் சேர்ந்து வாழ உரிய ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கணவர் குடும்பத்தினரின் பேச்சைக்கேட்டு செயல்படுவதற்கு விவாகரத்து வழங்க இயலாது. கணவரின் மனுவை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.