Happy Birthday Ajith Kumar (Photo Credit: Wikipedia)

மே 01, சென்னை (Cinema News): கடந்த 1971, மே ஒன்றாம் தேதி தஞ்சாவூர் மண்ணில் பிறந்த அஜித்குமார் (Ajith குமார் AK) சுப்பிரமணியம், இள வயதில் நன்கு படித்து தனக்கென தனி வழியே அன்றே உருவாக்கி ரேஸராக வலம் வந்தார். கடந்த 1990 ஆம் ஆண்டு என் வீடு என் கணவர் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, 1993இல் வெளியான அமராவதி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்திற்கு பின் ஆசை, உல்லாசம், வாலி, காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, வரலாறு, வில்லன், மங்காத்தா என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து தன்னை அல்டிமேட் சூப்பர் ஸ்டாராக தரம் உயர்திக்கொண்டார். Covishield Side Effects: கோவிஷீல்டு தடுப்பூசியால் என்னென்ன பக்கவிளைவுகள் வரும்.? வெளியான அதிர்ச்சி தகவல்..! 

ரசிகர்களின் அன்பு படங்களுக்கு சொந்தக்காரர்: நடிப்பு மட்டுமல்லாது ஃபார்முலா பந்தயங்களிலும் ஈடுபாடு கொண்ட அஜித், அவ்வப்போது அதிலும் கலந்து கொண்டு வந்தார். உலகளவில் பல நாடுகளுக்குச் சென்று இளம் தலைமுறைக்கு தேவையான வழிகாட்டுதலுடன் தனது திறமையையும் உபயோகம் செய்து புதிய கண்டுபிடிப்புகளையும் வழங்கும் நாயகனாக கவனம் செலுத்தும் அஜித், உழைப்பாளர் தினமான இன்று பிறந்தார். அஜித், ஏகே, தல, அல்டிமேட் சூப்பர்ஸ்டார் என பட்டங்களுக்கு இவர் சொந்தக்காரராக இருக்கிறார். அவரின் பிறந்தநாளை ரசிகர்கள் பலரும் திரளாக சிறப்பித்து வருகின்றனர். முந்தைய காலத்தில் இவருக்கென ரசிகர் மன்றம் அதிகாரவப்பூர்வமாக இருந்தாலும், அதனால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் ரசிகர்களின் நலம் கருதி அதனை கலைத்தும் உத்தரவிட்டார். தற்போது அஜித்துக்கான அதிகாரப்பூர்வமான ரசிகர் மன்றம் இல்லை என்னிடம், அவருக்கென உள்ள ரசிகர் கூட்டம் அவரை பின்தொடர்கிறது.

கடந்த 1999 ஆம் ஆண்டு இவர் சக நடிகையான ஷாலினியை கரம் பிடித்து, தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

மங்காத்தா ரீ-ரிலீஸை கொண்டாடிய ரசிகர்கள்:

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் வாழ்த்து:

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் வாழ்த்து: