Kaali Venkat & Mother Vijayalatsumi (Photo Credit: @KaaliActor / @PolimerTV X)

பிப்ரவரி 06, சென்னை (Cinema News): தமிழில் தெகிடி, முண்டாசுப்பட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற குணச்சித்திர நடிகர் காளி வெங்கட் (Kaali Venkat). இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். பள்ளிப்பருவத்தில் இருந்து நாடக மேடையில் விருப்பம் கொண்டு நடித்து வந்த காளி வெங்கட், நடிகராக வேண்டும் என்ற ஆசையில் 1997ல் சென்னைக்கு புறப்பட்டார்.

மக்களால் கவனிக்கப்பட்ட குணசித்திர நடிகர்:

தொடர்ந்து பல வாய்ப்புகளுக்காக காத்திருந்தவர் தெகிடி, முண்டாசுப்பட்டி ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். அதனைத்தொடர்ந்து, கலகலப்பு, மதயானைக்கூட்டம், உதயம் என்எச்4, வாயை மூடி பேசவும், இறுதிச்சுற்று, மிருதன், டார்லிங் 2, தெறி, கொடி, வேலைக்காரன், இரும்புத்திரை, ராட்சசன், சூரரைப்போற்று, ஈஸ்வரன், சார்பட்டா பரம்பரை, டான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்புகள் மக்களால் விரும்பப்படும் வகையிலும் அமைந்தது. Venkatraman: பழம்பெரும் செய்தி வாசிப்பாளர் ஆகாசவாணி வெங்கட்ராமன் மறைந்தார்: 102 வயதில் பிரிந்த உயிர்.!

காளி வெங்கட்டின் தாயார் மறைந்தார்:

இந்நிலையில், நடிகர் காளி வெங்கட்டின் தாயார் விஜயலட்சுமி (வயது 72) உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் மறைவு காளி வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காளி வெங்கட் தாயார் மறைவு: