டிசம்பர் 08, ஹைதராபாத் (Cinema News): செம்மரக்கடத்தல் தொடர்பான அரசியல், ரவுடியிசம் பின்னணி கொண்ட திரைப்படமாக, கடந்த 2022 டிசம்பர் மாதம் புஷ்பா (Pushpa) திரைப்படம் வெளியானது. சுகுமார் இயக்கத்தில், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா, என் சாமி உட்பட பல பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசையமைப்பு பணிகளை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டு இருந்தார். ரூ.200 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், பாக்ஸ் ஆபிசில் மட்டும் ரூ.350 கோடியை கடந்து வசூல் செய்தது.
முதல் நாளில் ரூ.294 கோடி வசூல்:
இதனையடுத்து, படத்தின் புஷ்பா இரண்டாம் (Pushpa 2) பாகமும் விறுவிறுப்புடன் படமாக்கப்பட்ட நிலையில், பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகளால் வெளியீடு தள்ளிச்சென்று, 05 டிசம்பர் 2024 அன்று படம் வெளியானது. தெலுங்கு மொழியில் உருவான திரைப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழியிலும் வெளியிடப்படுகிறது. இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் படக்குழு சார்பில் புதிய வழிகளில் முன்னெடுக்கப்பட்டது. உலகளவில் படத்தின் வெளியீடுக்கு முன்னதாகவே, ப்ரீபிக்கிங் முறையில் சுமார் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனையும் படைத்தது இருந்தது.
இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.449 கோடி வசூல்:
முதல் நாள் மட்டும் படம் ரூ.294 கோடி வசூலை செய்து மிகப்பெரிய சாதனையை அடைந்தது. படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2 நாட்களில் ஹிந்தி பதிப்பு மட்டும் ரூ.100 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது. இதனிடையே, படம் கடந்த இரண்டு நாட்களில் மொத்தமாக ரூ.449 கோடி வசூல் செய்துள்ளது. மூன்றாவது நாளான நேற்று விடுமுறை என்பதால், திரையரங்கில் கூட்டம் அலைமோதியது. இதனால் படத்தின் வசூல் ரூ.500 கோடிகளை கடந்து இருக்கலாம் என தெரியவருகிறது. இந்த தகவலை படக்குழுவும் உறுதி செய்துள்ளது.
படம் ரூ.500 கோடி வசூலை விரைந்து நெருங்கிவிட்டதாக படக்குழு அறிவிப்பு:
THE BIGGEST INDIAN FILM is a WILDFIRE AT THE BOX OFFICE and is SHATTERING RECORDS 🔥🔥#Pushpa2TheRule is now THE FASTEST INDIAN FILM to collect a gross of 500 CRORES WORLDWIDE ❤️🔥#RecordRapaRapAA 🔥
RULING IN CINEMAS
Book your tickets now!
🎟️ https://t.co/tHogUVEOs1… pic.twitter.com/63hLxGB29d
— Mythri Movie Makers (@MythriOfficial) December 7, 2024
ரூ.449 கோடி வசூல்:
WILDFIRE at the box-office 🔥🔥#Pushpa2TheRule grosses 449 CRORES WORLDWIDE in 2 days ❤🔥
The fastest Indian film to hit the milestone 💥💥#RecordRapaRapAA 🔥
RULING IN CINEMAS
Book your tickets now!
🎟️ https://t.co/tHogUVEgCt#Pushpa2#WildFirePushpa
Icon Star… pic.twitter.com/3uR8X6Tt7F
— Mythri Movie Makers (@MythriOfficial) December 7, 2024