Kadhalikka Neramillai (Photo Credit: YouTube)

ஜனவரி 08, சென்னை (Cinema News): ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ரவி, தனது அருமையான நடிப்பால் ஜெயம் ரவியாக (Jayam Ravi) உருவெடுத்தார். தொடர்ந்து தன் அண்ணனுடன் பல்வேறு படங்களில் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில், பொன்னியின் செல்வனாக நடித்து அனைவரின் மனதையும் வென்றார். ஆனால் அதன் பின் வெளியான படம் எதுவும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. சொல்லப்போனால் நீண்ட காலமாக வெற்றி படத்தை கொடுக்காமல் உள்ளார். பூமி படத்தில் ஆரம்பித்த தோல்வி இறைவன், அகிலன், சைரன், பிரதர் என்று அவரை படுத்தி எடுத்து வருகிறது. பொன்னியின் செல்வன் என்னதான் வெற்றி படமாக இருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்ததினால், அவரின் தனிப்பட வெற்றியாக அது பார்க்கப்படுவதில்லை.

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து:

இதற்கிடையே நடிகர் ஜெயம் ரவி கடந்த செப்டம்பர் 9ந் தேதி, தனது எக்ஸ் தள பக்கத்தில், நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்கான எடுக்கப்பட்டு முடிவு என அறிக்கை வெளியிட்டு இருந்தார். தனது பிறந்த நாள் அன்று, மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். Bigg Boss Tamil Season 8: வீட்டின் விதிமுறையை மீறிய ரவீந்தர்; நேரில் அழைத்து கண்டித்த பிக் பாஸ்.!

காதலிக்க நேரமில்லை:

தொடர்ந்து கடந்த மாதம் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ (Kadhalikka Neramillai) படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இன்றைய தலைமுறையினரின் காதல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. காதலும், அதைத் தொடர்ந்த மோதலுமாக விரியும் டிரைலர், வெளியான கொஞ்ச நேரத்திலேயே ரசிகர்கள் கொண்டாடத் துவங்கி இருக்கிறார்கள்.

காதலிக்க நேரமில்லை பட டிரைலர்: