Aishwarya Rai Bachchan (Photo Credit: @SaruKeKhayal X)

பிப்ரவரி 19, சென்னை (Cinema News): இந்தியாவிலிருந்து பலரும் உலக அலகி பட்டம் பெற்றிருந்தாலும், மக்களின் மனங்களில் இன்று வரை தனது உலக அழகி பட்டத்தை வேறு யாருக்கும் தராமால் அமர்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பேரழகியான வில்லி கதாப்பாத்திரமான நந்தினியாக நடித்து, பல இளம் மனங்களை கவர்ந்திருப்பதே அவரின் அழகை பற்றிக் கூறும். அழகிற்கு இணையாகவே இவருக்கு நடிப்புத் திறமையும் உள்ளது இல்லையேனில் ஆண்களை தன் அழகாலும் அறிவாலும் கட்டி வைக்கும் நந்தினி கதாப்பாத்திரத்திற்கு எப்படி உயிர் ஊட்டி இருக்க முடியும்.

1973ல் கர்நாடகாவில் மங்களூரில், டிரெடிஷனல் தென்னிந்தியா குடும்பத்தில் பிறந்த இவர், 1994ல் உலக அழகி பட்டத்தை பெற்றார். மாடலிங் துறையில் இருந்த இவர் 1997ல் மணிரத்தினம் இயக்கிய ‘இருவர்’ என்னும் தமிழ் படம் மூலம் இந்திய திரையுலகிற்கு வந்தார் ஐஸ்வர்யா ராய். அதன் பின் பல தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி படங்களில் நடித்துள்ளார். ஹிந்தியில் அதிக ஃபேன்பேஷை கொண்டு பாலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வந்தார். சில பெரிய பாலிவுட் நட்சத்திரங்களுடன் காதல்களும் முறிவுகளும் இருந்தது. இறுதியில் தூம் திரைப்படத்தில் ஒன்றாக நடித்த அபிஷேக் பச்சனுடன் காதல் மலர்ந்து 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். Antrum: உலகில் மிக ஆபத்தான திகில் படம்.. யாரும் தனியா பார்க்காதீங்க.!

முழுமதி அவளது முகமாகும்:

ஹிந்தியில் பல படங்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழில் ஜீன்ஸ் படத்தையும் ஏற்றுக் கொண்டார். இப்படம் அவருக்கு திரைத்துறையில் திருப்பத்தை கொண்டு வந்து பெரிய அளவில் எடுத்துச் சென்றது. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், குரு திரைப்படங்களில் அவரின் பால் போன்ற முக அழகாலும், சில்வர் நிற கண்களாலும் தமிழ் திரையுலகில் அனைவரையும் தன் பக்கம் வைத்திருந்தார். ஹிந்தியில் வெற்றி தோல்வி படங்களை கொடுத்து வந்தார். திருமணத்திற்கு பின்னர் உடல் எடை ரீதியாக பல பிரச்சனைகள் எழுந்த நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு உடல் எடை குறைத்து நடிக்க தொடங்கினார். எப்படி இருந்தாலும் அவரின் ரசிகர் பட்டாளம் மட்டும் குறையாமலே இருந்தது. ஜோதா அக்பர் திரைப்படத்தில் அவரின் நடிப்பை நிச்சயம் அவ்வளவு சீக்கிரம் யாரலும் மறந்து விட முடியாது.

பேரழகி ஐஸ்வர்யா:

பல நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க வேண்டும் என்பது ஆசை என கூறியிருக்கிறார். பல திரைப்படங்களில் முயற்சி செய்து கடைசியில் சங்கர் இயக்கிய எந்திரனில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். பின் மீண்டும் மணிரத்தினம் இயக்கிய, தமிழ் திரையுலகில் மறக்க முடியாத ‘ராவணன்’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஜோடியை அனைவரும் ரசித்தனர். பொன்னியின் செல்வனின் மீண்டும் இவர்கள் இருவரும் வரும் ஒவ்வொரு ஃபெரேமிலும், ஐஸ்வர்யாவின் கண்கள் கூட அழகான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியது.

அக முக அழகு:

நடிப்பில் மட்டுமல்ல இவரின் பேச்சு திறமைக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். எந்த கேள்வி கேட்டாலும் அதை மிகவும் பக்குவமாகவும் பொறுமையாக, நேரடி பதில்களையே தருவார். இயற்கையாகவே அழகும் அறிவும் கலந்த பெண்னாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராய் பச்சன். இன்று வரை மாடலிங்கிலும் சினிமாவிலும் சாதிக்க விரும்பும் பெண்களும் இவர் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். தற்போது 49 வயதைக் கடந்தாலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அனைவரின் மனதிலும் மீண்டும் ஒரு முறை அழமாக தான் உலக அழகி என பதியவைத்து விட்டார்.