Allu Arjun (Photo Credit: @PTI_News X)

ஜனவரி 07, ஐதராபாத் (Cinema News): அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 (Pushpa 2) திரைப்படம் கடந்த டிசம்பர் 05ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் திரையிடப்படுவதற்கு முன்பு, படத்தின் பிரீமியர் காட்சி ஐதராபாத்தில் (Hyderabad) உள்ள சந்தியா திரையரங்கில் டிசம்பர் 04ஆம் தேதி அன்று இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. இதனை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜூன் அங்கு சென்றார். அப்போது, அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக அதிகளவிலான ரசிகர்கள் தியேட்டரில் கூடினர்.

கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி:

இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (Stampede) சிக்கி, ரேவதி (வயது 35) என்ற பெண்ணும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் (வயது 9) நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதனையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த பெண் உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ‘Good Bad Ugly’ Release Date: தல அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இட்லி கடையுடன் மோதல்.. விபரம் உள்ளே.!

நடிகர் அல்லு அர்ஜீன் மீது வழக்குப்பதிவு:

இதுதொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் டிசம்பர் 13ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். இதன்பின்னர், ஜாமீனில் வெளியே வந்தார். சிறையிலிருந்து வெளியே வந்த அல்லு அர்ஜுன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எல்லா வகையிலும் உதவி செய்வதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கு சிறுவனை கவனித்து வருவதாக அவர் கூறினார்.

சிறுவன் மூளைச்சாவு:

இதற்கிடையே கிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு, மூளைச் சாவு (Brain Death) ஏற்பட்டது. இந்த சூழலில் ஹைதராபாத் ராம்கோபால்பேட்டா காவல் நிலையத்தில் இருந்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், கிம்ஸ் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீதேஜ்ஜை, அல்லு அர்ஜுன் சந்திக்க வரக்கூடாது என்று குறிப்பிடப்பட்டது. நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் வந்தால் சாட்சியை மாற்றிவிடக் கூடும், அவர் மருத்துவமனைக்கு வந்தால் மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அவர் கிம்ஸ் மருத்துவமனைக்கு வரக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீ தேஜ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் சென்று பார்வையிட்டு, குடும்பத்தாரிடம் நலம் விசாரித்து வந்தார்.

சிகிச்சை பெற்று வரும் சிறுவனை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட அல்லு அர்ஜுன்: