Arun Vijay (Photo Credit: Instagram)

டிசம்பர் 03, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ் (Dhanush). அவர் நடிப்பில் தற்போது டஜன் கணக்கிலான படங்கள் உருவாகி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் படங்களை இயக்கியும் வருகிறார். 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தனுஷ். அண்மையில் வெளியான அவரது 50-வது படமான 'ராயன்' படத்தையும் அவரே இயக்கினார். 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.

இட்லி கடை: அடுத்ததாக இட்லி கடை (Idly Kadai) என்ற படத்தையும் இயக்கி வருகின்றார். தனுஷ், அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் நடித்து வரும் இட்லி கடை திரைப்படம் பீல் குட் படமாக தயாராகி வருகின்றது. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. Naga Chaitanya - Sobhita Dhulipala Wedding: களைகட்டும் நாக சைதன்யா-சோபிதா திருமணம்.. மெழுகு பொம்மையாக ஜொலிக்கும் மணப்பெண்..!

அருண் விஜய் சம்பளம் (Arun Vijay Salary): இட்லி கடை படத்தில் அருண் விஜய் பயங்கர வில்லனாக நடித்த வருகிறார். நல்ல திறமைகள் இருந்தும் சினிமாவில் ஒரு பெரிய டர்னிங் பாயிண்டுக்காக காத்திருந்தவருக்கு, அஜித் குமாருடன் நடித்த "என்னை அறிந்தால்" வில்லன் கதாபாத்திரம் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது இட்லி கடை படத்திற்காக எட்டு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார். இன்னும் வணங்கான் படத்திற்கு பிறகு இவரது சம்பளம் உயர வாய்ப்பு இருக்கிறது. முன்னர் இவர் ஒரு படத்திற்கு 5 கோடியினை சம்பளமாக வாங்கியது குறிப்பிடத்தக்கது.