Darshan (Photo Credit: @IndiaToday X)

ஆகஸ்ட் 26, பெங்களூரு (Karnataka News): கன்னட சினிமாவில் ‘அனதரு’, ‘கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தர்ஷன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘காடேரா' திரைப்படம் ரசிகர்களிடன் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் ரேணுகா சுவாமி என்பவரை கொலை (Murder Case In Bengaluru) செய்த வழக்கில் மைசூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வைத்து இந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவின் காமல்ஷில்பாயாவில் உள்ள வாய்க்காலில் கொல்லப்பட்ட ரேணுகா சுவாமியின் உடல் கடந்த ஜூன் 9-ம் தேதி கண்டறியப்பட்டது. அவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இவர், நடிகர் தர்ஷனுக்கு நெருங்கிய தோழியான பவித்ரா கவுடா என்பவருக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதன்காரணமாக கொல்லபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். Hema Committee: நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை பாலியல் புகார்.. ரியாஸ் கான் கூறுவது என்ன?.!

சிறையில் சொகுசு வசதி: இந்த வழக்கில் தர்ஷன் உடன் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்றத் தலைவர், பவுன்சர்கள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நடிகர் தர்ஷன் தூகுதீபா ஜெயில் வளாகத்தில் சொகுசாக திறந்தவெளியில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கையில் டீ கப் மற்றும் சிகரெட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த விவகாரத்தில் 7 சிறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறைக் கண்காணிப்பாளர் உட்பட மூத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.