Brother (Photo Credit: LatestLY)

நவம்பர் 01, சென்னை (Cinema News): ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ரவி, தனது அருமையான நடிப்பால் ஜெயம் ரவியாக (Jayam Ravi) உருவெடுத்தார். தொடர்ந்து தன் அண்ணனுடன் பல்வேறு படங்களில் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில், பொன்னியின் செல்வனாக நடித்து அனைவரின் மனதையும் வென்றார். ஆனால் அதன் பின் வெளியான படம் எதுவும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. சொல்லப்போனால் நீண்ட காலமாக வெற்றி படத்தை கொடுக்காமல் உள்ளார். பூமி படத்தில் ஆரம்பித்த தோல்வி இறைவன், அகிலன், சைரன் என்று அவரை படுத்தி எடுத்து வருகிறது. பொன்னியின் செல்வன் என்னதான் வெற்றி படமாக இருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்ததினால், அவரின் தனிப்பட வெற்றியாக அது பார்க்கப்படுவதில்லை. இந்த பிரதர் ஆவது ஜெயம் ரவிக்கு கைக்கொடுத்ததா, பார்ப்போம்.

பிரதர்: கடந்த சில வருடங்களாக ராஜேஷ் இயக்கத்தில் வெளியான படங்கள் பெரிதாக ஹிட்டாகாத சூழலில் ராஜேஷ் ஜெயம் ரவியை வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, பிரியங்கா மோகன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். நகைச்சுவை மற்றும் குடும்ப பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் பிரதர் திரைப்படம் தீபாவளிக்கு நேற்று வெளியானது. Squid Game Season 2: ஸ்குவிட் கேம் சீசன் 2: அசத்தல் டீசர் உள்ளே.. உலகளவில் டிசம்பர் 26ல் வெளியீடு.! | 🎥 LatestLY தமிழ்

கதைக்களம்: கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் தான் அறிவு வளரும் பள்ளி பருவத்தில் ஆசிரியர் கற்றுக் கொடுக்கதை வேத வாக்காக எடுத்து அவரிடமே கேள்வி கேட்டு திட்டும் வாங்கும் கதையின் நாயகன் கார்த்திக் (ஜெயம் ரவி), அந்த பழக்கத்தால் பல பிரச்சனைகளில் சிக்குகிறார். இடத்தில் எல்லாம் லா பாயிண்ட் பேச, ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி அப்பாவிற்கு நெஞ்சு வலி வர, இதுக்கு மேல் நீ வீட்டில் இருக்காதே என்று திட்டுகிறார். எனவே ஊட்டியில் இருக்கும் அக்கா ஆனந்தியின் (பூமிகா) வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள் பெற்றோர். ஆனால் யோசிக்காமல் எதையும் செய்யும் கார்த்திக்கால் அக்கா குடும்பத்தில் பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது. குடும்பமே பிரியும் நிலை ஏற்பட பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

ப்ளஸ்: கார்த்திக் கதாபாத்திரத்தில் ஒட்டு மொத்த படத்தையும் தாங்கியிருக்கிறார் ஜெயம் ரவி. பூமிகா குடும்பத்திற்குள் சென்ற பிறகு விடிவி கணேஷுடன் அவர் அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது. ஹரிஷ் ஜெயராஜ் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. படம் முழுவதும் மக்காமிஷி பாடல் டிராவல் செய்கிறது. குடும்ப சென்டிமென்ட், அக்கா-தம்பி பாசம், ஜாலியான ஹீரோவின் சேட்டைகள், காமெடி காட்சிகள், பாடல் காட்சிகள் என குடும்ப ஆடியன்ஸ் கொண்டாடும் அனைத்து விஷயமும் பிரதர் படத்தில் இருக்கிறது.

மைனஸ்: ஜெயம் ரவியை தாண்டி படத்தில் வந்த அனைவரும் எதோ நாடகத்தனமான நடிப்பு தான். குழந்தைகள் நாடகத்தை பார்த்து மனம் மாறும் இடமெல்லாம் ஏன் ராஜேஸ் இவ்ளோ பழைய மசாலாவை அரைத்து வைத்துள்ளீர்கள். ஹிந்தி சீரியல் போன்று எடுத்து வைத்துள்ளார். அக்கா, தம்பி என்ற உணர்வை தொட்டால் அதில் அடித்து ஆட வேண்டும். ஆனால் ராஜேஷ் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார்.

தீபாவளிக்கு குடும்பத்தோடு சென்று பார்க்க சிறந்த படம். மொத்தத்தில் பிரதர் குடும்பங்கள் கொண்டாடும் படம்.