Chiranjeevi (Photo Credit: Instagram)

செப்டம்பர் 23, சென்னை (Cinema News): தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி (Megastar Chiranjeevi), தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கடந்த 46 ஆண்டுகளாக சிரஞ்சீவி டோலிவுட்டில் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக சிரஞ்சீவி தனது படங்களில் நடனம் மூலம் புதிய போக்கையே உருவாக்கினார். 143 திரைப்படங்களில் 537 பாடல்களுக்கு சிரஞ்சீவி நடனமாடி இருக்கிறார். அதில் 24 ஆயிரம் வித்தியாசமான நடன அசைவுகளை ஆடியிருப்பதாக அவரை கெளரவித்து இந்த கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவருக்கு பாலிவுட் நடிகர் அமீர்கான் வழங்கினார். இந்த நிகழ்ச்சி இந்தியா- ஹைதராபாத்தில் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. Laapataa Ladies: "தலையை மூடி முக்காடு போட்டுட்டீங்க. பிறகு எப்படி நிமிர்ந்து பாக்கறது?" ஆஸ்கர் பந்தயத்துக்குச் செல்லும் லாபதா லேடீஸ்..!

இந்த சான்றை பெற்றுக் கொண்ட சிரஞ்சீவி கூறியதாவது, இந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. கின்னஸ் சாதனை படைப்பேன் என நான் நினைத்தே இல்லை. என் நடனத்திற்காக இந்த கவுரவம் கிடைத்ததில் மகிழ்ச்சி.டான்ஸால் தான் நான் ஸ்டார் ஆனேன். என் கெரியர் முழுவதும் டான்ஸால் எனக்கு பல விருதுகள் கிடைத்தது என்றார். நடிகர் சிரஞ்சீவி தற்போது "விசுவாம்பரா" என்ற திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் சாதனை படைத்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி: