டிசம்பர் 13, ஹைதராபாத் (Cinema News): தெலுங்கு திரையலகின் பிரபல நடிகர் மஞ்சு மோகன் பாபு (Mohan Babu). இவருக்கும், இவரின் மகன் மனோஜ் மஞ்சு - மருமகள் மோனிகாவுக்குமிடையே சொத்து தகராறு தொடர்பாக பிரச்னை நடந்து வருகிறது. சமீபத்தில் இவர் அவரின் மகன் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். இது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்க பத்திரிக்கையாளர்கள் ஹைதராபாத் புறநகரில் உள்ள ஜல்பல்லியில் நடிகர் மஞ்சு மோகன் பாபுவின் பண்ணை வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர்.
அப்போது கடுப்பான மோகன் பாபு பத்திரிக்கையாளர்களின் மைக்கை பிடிங்கி தாக்கினார். இதில் மைக் பத்திரிக்கையாளர் ஒருவரின் முகத்தில் பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதெல்லாம் அவரின் கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ், பி.என்.எஸ் பிரிவு 118 படி FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Allu Arjun Arrested: அல்லு அர்ஜுன் திடீர் கைது.. வீட்டிலிருந்தவரை இழுத்து செல்ல காரணம் என்ன?!
இந்த சம்பவத்திற்கு பிறகு நடிகர் மோகன் பாபு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலியின் காரணமாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து பத்திரிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் நடிகர் மோகன் பாபு டிசம்பர் 13ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.