திருக்குறள் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு; சாதனை படைத்த 86 வயது மூதாட்டி..!

உலக பொதுமறையான திருக்குறளை, 86 வயதான மூதாட்டி மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

திருக்குறள் மலையாளத்தில் மொழிபெயர்ப்பு; சாதனை படைத்த 86 வயது மூதாட்டி..!
Thiruvalluvar (Photo Credit: @suryahawk99 X)

மார்ச் 18, பாலக்காடு (Kerala News): கேரள மாநிலம், பாலக்காடு (Palakkad) மாவட்டத்தில் மண்ணார்க்காடு அருகே முட்டிகுளங்கரை பகுதியை சேர்ந்தவர் ராதா (வயது 86). இவர், சிறுவயதில் ஐந்தாம் வகுப்பு வரை மலையாளம் மொழியில் படித்தார். அதன்பின், அவரது தந்தை மணி ஐய்யர் தொழில் காரணமாக, தமிழகத்தில் உள்ள திருமங்கலம் பகுதிக்கு குடும்பத்துடன் குடிப்பெயர்ந்தார். அங்கு, 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்தார். Students Fight Video: பேருந்து மீது கற்களை வீசி, மாணவர்கள் தாக்குதல்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

திருக்குறள் மொழிபெயர்ப்பு:

இதனையடுத்து, 'பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா' மதுரை நிரூபரான, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி திருமிற்றைக்கோடு பகுதியை சேர்ந்த அச்சுதனை திருமணம் செய்தார். அதன்பின் மதுரையில் வசித்து வந்தார். பயணங்களை மிகவும் விரும்பும் இவர், கணவர் இறந்த பின், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஏராளமான பயணங்கள் மேற்கொண்டார். இந்நிலையில், தன் பயணத்தை எளிய மொழியில் விளக்கும் வகையில், புத்தகம் எழுதி வெளியிட்டு வந்த அவர், தற்போது உலக பொதுமறையான திருக்குறளை (Thirukkural) மலையாளத்தில் மொழி பெயர்த்து நூலாக வடிவமைத்துள்ளார். நூலின் வெளியீட்டு விழா, பாலக்காடு மாவட்ட நூலக ஹாலில் நடந்தது. மதுரை தியாகராஜ கல்லூரி பேராசிரியர் முனைவர். ஞானசம்பந்தன், எழுத்தாளர் சங்கரநாராயணனுக்கு மலையாள திருக்குறள் நூலை வழங்கி வெளியிட்டார்.

மூதாட்டி சாதனை:

இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா காலக்கட்டத்தில் தனிமையில் இருந்த போது, அதிலிருந்து மீள்வதற்கான வழியைத் தேடினேன். அப்போதுதான் திருவள்ளுவரின் (Thiruvalluvar) திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அறத்துப்பால், பொருட்ப்பால், காமத்துப்பால் என, மூன்று பிரிவுகளாக தயார் செய்த திருக்குறளை, மக்களுக்கு புரியும் வகையில் மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். இதற்கு முன் பிரபல எழுத்தாளர்கள் 3 பேர் திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

(The above story first appeared on LatestLY on Mar 18, 2025 08:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).