ஜனவரி 24, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா, பிகில் உள்ளிட்ட ஏராளமான படங்களில் துணை நடிகராக நடித்தவர் ஜெயசீலன் (Actor Jayaseelan). தெறி படத்தில் பள்ளிக்கூடத்தில் இருக்கும் ரவுடிகளை விஜய் பாடம் நடத்தி விரட்டி அடிக்கும் காட்சியில் "ட்விங்கிளு ட்விங்கிளு சூப்பர் ஸ்டாரு.. அவ்வையார்.. வாத்தியார்" என தப்புத் தப்பாக ரைம்ஸ் பாடி காமெடி செய்யும் அடியாளாக நடித்த நடிகர் ஜெயசீலன். Underrated Tamil Actors: நடிப்பில் குறைப்பு மதிப்பிடப்படுவர்கள்.. அசோக் செல்வன் முதல் ஆதி வரை.. முழு லிஸ்ட் இதோ.!
நடிகர் ஜெயசீலன் மறைவு (Actor Jayaseelan Death):
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் திருமணம் செய்துகொள்ளாமல் வசித்த வந்த 40 வயதான ஜெயசீலன் கடந்த இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், மஞ்சள் காமாலை கடுமையாகி, சிகிச்சைபலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கிப்போயுள்ளனர். தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஜெயசீலனுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.