Kottukkaali (Photo Credit: Instagram)

செப்டம்பர் 23, சென்னை (Cinema News): கூழாங்கல் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ்.வினோத்ராஜ். தனது முதல் படத்திலேயே உலக அளவில் கவனம் ஈர்த்தார். அந்தப் படம் ஏராளமான சர்வதேச விருதுகளை வென்றது. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு கொட்டுக்காளி (Kottukkaali) படத்தினை இயக்கி இருந்தார் இயக்குனர். படத்தில் சூரி மற்றும் அன்னா பென் இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக அன்னா பென் நடித்துள்ளார். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து உள்ளார். இப்படத்தில் ஒரு பாடல் கூட இல்லை மேலும் பின்னணி இசை இல்லை. காரணம் படத்தில் இசை அமைப்பாளர் இல்லை. இந்தப் படம் உலகத்தில் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது பெற்றது.

கதைக்கரு: 12ம் வகுப்பு முடிந்த உடனே தனது முறைப்பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளாமல் பாண்டி (சூரி) அவரை கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறார். ஆனால், கல்லூரியில் காதல் வயப்பட்ட மீனா (அன்னா பென்) பாண்டியை திருமணம் செய்ய மறுக்கிறார். அவருக்கு பேய் பிடித்து விட்டதாகக் கூறி குடும்பமே சாமியார் ஒருவரிடம் அழைத்துச் செல்லும். கடைசியாக மீனாவுக்கு பிடித்த பேய் ஓட்டப்பட்டதா? இந்த சமூகத்தில் நிலவும் பேய் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதா? என்பது தான் கதை. Megastar Chiranjeevi: 24 ஆயிரம் டான்ஸ் மூவ்ஸ்.. கின்னஸ் சாதனை படைத்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி..!

கிராண்ட் பிரிக்ஸ்: தற்பொழுது, ரஷ்யாவில் கடந்த 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற்ற 22வது ’Amur Autumn’ சர்வதேச திரைப்பட விழாவில், ‘கொட்டுக்காளி’ திரைப்படம் கிராண்ட் பிரிக்ஸ் (GRAND PRIX AWARD) விருதை வென்றது. விருதை வென்றபிறகு மேடையில் பேசிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், நான் என் தாய்மொழியில் பேச விரும்புவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த விருது முக்கியமான தருணத்தில் எனக்கு கிடைத்துள்ளது. இதை நான் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், துணை தயாரிப்பாளர் கலை, நடிகர்கள் சூரி, அனாபென், புரடக்சன் டிபார்ட்மென்ட், எப்போதும் என்னைவிட்டு போகாத என்னுடைய டீம், திரைப்படத்தின் பலமாக இருந்த அனைவருக்கும், எனது மனைவி மற்றும் குழந்தைக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்து அனைவருக்கும் நன்றியையும் கூறினார்.

தமிழில் பேசி கலக்கிய இயக்குநர்: