டிசம்பர் 13, நம்பள்ளி (Cinema News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் செயல்பட்டு வரும் சந்தியா திரையரங்கில், நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 (Pushpa 2: The Rule) திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் நள்ளிரவு முதல் காத்திருந்து படம் பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், ரசிகர்களை ஆரவாரப்படுத்த, நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி திரையரங்குக்கு (Sandhya Theatre Case) வந்தார்.
இழப்பீடு அறிவிப்பு:
இதனால் திரையரங்குக்குள் ஏற்பட்ட திடீர் தள்ளு-முள்ளு காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரின் மகன் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் இரங்கல் தெரிவித்து, பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்தார். எனினும், அல்லு அர்ஜுனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது. Look Back Sports 2024: 2024ம் ஆண்டில் விளையாட்டில் நாம் எதிர்பார்க்காத திரும்புமுனைகள்.. உள்ளூர் முதல் உலகம் வரை.. அசத்தல் விபரம் இதோ..!
இன்று காலை கைது:
இதனிடையே, இன்று காலை திடீரென நடிகர் அல்லு அர்ஜுன் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். மேலும், அவரின் மீது ஆபத்தை விளைவித்தல், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உட்பட இந்திய அரசியலமைப்பு சட்டம் 304 உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அவருக்கு பிணை கிடைப்பது அல்லது சொந்த ஜாமினில் வெளியே அனுப்புவது கடினமானது என தெரியவந்தது.
14 நாட்கள் சிறைவாசத்திற்கு உத்தரவு:
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனை நம்பள்ளி நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்திய நிலையில், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்படுவார். அல்லு அர்ஜுனின் கைதுக்கு பின்னால் அரசியல் அழுத்தம் இருப்பதாகவும், அவர் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வாக்குசேகரித்ததாகவும், ஹைதராபாத் விழா ஒன்றில் தெலுங்கானா முதல்வரான ரேவந்த் ரெட்டிக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்படும்போது பதிவு செய்யப்பட்ட காணொளி:
#AlluArjun Visuals at Nampally Court.#AlluArjunArrest #AlluArjunArrested pic.twitter.com/LZpA1VWuEo
— Filmy Focus (@FilmyFocus) December 13, 2024
நீதிமன்ற வளாகத்தில் இருந்து அல்லு அர்ஜுன் அழைத்து செல்லப்படும் காட்சி:
🚨 Big Breaking News 🚨
Court sends Allu Arjun to 14 days remand...!#AlluArjun.#chikkadpally #AlluArjunArrested #Pushpa2 pic.twitter.com/soK0EpEz6h
— NAMMA CINEMA (@nammacinemaka) December 13, 2024
அல்லு அர்ஜுனின் கைது விவகாரம், அவரின் ரசிகர்களிடையேம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.