Premalu (Photo Credit: @VenkatRamanan_ X)

மார்ச் 13, சென்னை (Cinema News): இயக்குனர் கிரீஷ் ஏ.டி (Girish) இயக்கத்தில் மமிதா பைஜு, நஸ்லென் (Naslen) முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் பிரேமலு (Premalu). மலையாள பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் தயாரிப்பில் உருவான இந்த படம் கடந்த மாதம் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. கல்லூரி காலத்தில் ஏற்படும் பருவ காதல் அதனை சுற்றி நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், இளைஞர்கள் மற்றுமின்றி அனைத்து வயது மக்களிடமும் சென்றடைந்து வெற்றி பெற்றுள்ளது. சுமார் ஐந்து கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது 70 கோடியை தாண்டி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. Ponmagan Scheme: பெண்களுக்கு மட்டும்மில்லை.. ஆண்களுக்கும் இருக்கு சேமிப்புத் திட்டம்.. பொன்மகன் சேமிப்புத் திட்டம்..!

இந்த நிலையில், பிரேமலு படத்தின் தமிழ் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை வரும் 15-ம் தேதி தமிழ் மொழியில் தமிழக திரையரங்குகளில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பிரமயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் படமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.