Pushpa 2 Review (Photo Credit: LatestLY)

டிசம்பர் 09, ஹைதராபாத் (Cinema News): செம்மரக்கடத்தல் தொடர்பான அரசியல், ரவுடியிசம் பின்னணி கொண்ட திரைப்படமாக, கடந்த 2022 டிசம்பர் மாதம் புஷ்பா (Pushpa) திரைப்படம் வெளியானது. சுகுமார் இயக்கத்தில், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா, என் சாமி உட்பட பல பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.200 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், பாக்ஸ் ஆபிசில் மட்டும் ரூ.350 கோடியை கடந்து வசூல் செய்தது. இதனையடுத்து, படத்தின் புஷ்பா இரண்டாம் (Pushpa 2) பாகமும் விறுவிறுப்புடன் படமாக்கப்பட்ட நிலையில், பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகளால் வெளியீடு தள்ளிச்சென்று, 05 டிசம்பர் 2024 அன்று படம் வெளியானது. தெலுங்கு மொழியில் உருவான திரைப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழியிலும் வெளியிடப்பட்டது.

புஷ்பா கதை: புஷ்பா படத்தின் முதல் பாகத்தில், புஷ்பராஜ் எவ்வாறு சந்தன கடத்தலில் ஈடுபட ஆரம்பிக்கிறார் என்பதிலிருந்து சிண்டிகேட் தலைவராக எவ்வாறு உருவெடுக்கிறார் என்பது வரை காட்டியிருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக புஷ்பா 2 படம் நடக்கிறது. புஷ்பராஜ் தன் மனைவி ஆசைப்படி முதலமைச்சருடன் போட்டோ எடுக்க அவரைப் பார்க்க செல்கிறார். ஆனால் கடத்தல்காரனுடன் புகைப்படம் எடுக்க மாட்டேன் என்று முதலமைச்சர் கூறுகிறார். இதனால் கடுப்பான புஷ்பா முதலமைச்சரையே மாற்றுகிறார். இன்னொரு பக்கம் இவர் செம்மரம் கடத்தலை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என போராடுகிறார், ஐபிஎஸ் போலீஸ் ஆபீஸர் ஃபகத் ஃபாசில். அவர் தடுத்தாரா? இல்லையா? புஷ்பா தன் அண்ணனுடன் சேர்ந்தாரா? இல்லையா? என பல கதைகளுடன் புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 3 மணி நேரம் 20 நிமிடம் சிறிதும் நிற்காமல் வேகமாக ஓடுகிறது. Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழில் இன்று டபுள் எவிக்சன்; அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த விஜய் சேதுபதி..!

ப்ளஸ்: இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பா வாகவே வாழ்ந்து உள்ளார். கையை தூக்கிக் கொண்டு நடக்கும் விதமாகட்டும் அடங்காதவன் என்று கூறும் தோரணையாகட்டும் தனக்கென்று தனி ஸ்டைலை உருவாக்கியுள்ளார். ரொமான்ஸ், எமோஷன், மாஸ் என ஆல் ஏரியாவிலும் 'வாவ்' சொல்ல வைக்கிறார். அதிலும் சண்டைக் காட்சிகளில் ருத்ர தாண்டவமே ஆடியுள்ளார். ஶ்ரீவள்ளியாக ராஷ்மிகா மந்தனா எப்போதும் போன்று கிரிஞ்ச் செய்யாமல் நன்றாக நடித்துள்ளார். ஃபகத் கிடைக்கிற கேப்பில் ஸ்கோர் செய்தாலும் கதையில் இந்த கதாபாத்திரம் அழுத்தமாக எழுதப்படாத ஒன்று. புஷ்பா கதாபாத்திரத்தில் மனைவியிடம் 'பிளவர்' ஆகவும், பஹத் பாசிலுடன் 'பயர்' ஆகவும், எம்.பி, முதல்வர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகளுடன் 'வைல்டு பயர்' ஆகவும் மொத்தத்தில் அதிரடியாகவும் உள்ளது. கிஸ்ஸிக்' என்ற ஒரே ஒரு பாடலுக்கு சரியான குத்தாட்டம் போட்டு சென்றுள்ளார் ஸ்ரீலிலா.

மைனஸ்: கிட்டத்தட்ட மூணு மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் சில இடங்களில் அயற்சியை ஏற்படுத்துகிறது. சிறிது நேரத்திலேயே மாஸ் சீன் வைத்து அதனை போக்கவும் செய்கிறது. மனைவியின் ஆசைக்காக முதலமைச்சரை மாற்றுவது, கடல் நீருக்கடியில் செம்மர கட்டைகளை கடத்துவது, பெட்டிக்கடையில் மிட்டாயை வாங்குவது போல ஹெலிகாப்டரை வாங்குவது, எந்தத் தடையும் இல்லாமல் எந்த நாட்டிற்கு வேண்டுமென்றாலும் பறப்பது என லாஜிக் மீறல்கள் பல உள்ளன. அது மட்டும் இல்லை லாஜிக் மீறலில் தான் சண்டைக் காட்சிகள் உள்ளன.

பெண் தன் கணவனிடம் பாலியல் வேட்கையை வெளிப்படுத்துவதாக வைத்த காட்சிகள் துணிச்சலாக இருப்பினும் ரசிக்கும்படி இல்லை. மேலும் க்ளைமாக்ஸ் எல்லாம் பாலையா லெவலையை தூக்கிச் சாப்பிடும் ரக சண்டைக் காட்சிகள் உள்ளன. அந்த அளவிற்கு கழுத்தைக் கவ்வி கொண்டு சண்டையிடுகிறார் ஹீரோ. படத்தின் மையக்கதை, அரை மணிநேரத்திற்கு ஒரு முறை மாறுகிறது. பெரும்பாலான காட்சிகளின் தேவை முடிந்த பின்பும் கூட இழுத்துக் கொண்டு சென்று கொண்டே உள்ளன. மெகா சீரியலே தோற்றுவிடும் போல உள்ளது. மாஸ் மசாலா கமர்ஷியல் தெலுங்குப் படங்களில் லாஜிக் எதிர்பார்க்கக்கூடாது என்ற மனநிலையும் இருந்தாலுமே சில இடங்கள் நம்மை சோதிக்க வைக்கின்றன.

எந்த லாஜிக்கும் பார்க்காமல் பக்கா கமர்ஷியல் படம் பார்க்க விரும்புவோருக்கு 'புஷ்பா 2' நிச்சயமாக ஈர்க்கும்.