Bigg Boss Tamil Season 8 | Day 63 Promo on Double Eviction (Photo Credit: @VijayTelevision X)

டிசம்பர் 08, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil) சீசன் 8, 63 வது நாளில் இன்று ஒளிபரப்பு செய்யப்படுகிறது. போட்டி தொடர்ந்து தொடர்ந்து விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஏஞ்சல்-டெவில் தொடர்பான டாஸ்க் நடந்து இருந்தது. இதில் கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது போல ஜாக்குலின், ஐஸ்வர்யா, ரஞ்சித், ஜெப்ரி ஆகியோர் ஈடுபட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. Pushpa 2: அடேங்கப்பா... 2 நாளில் ரூ.449 கோடி வசூல்; இமாலய சாதனைகளை படைத்த புஷ்பா 2 திரைப்படம்.! 

போட்டியாளர்கள் விபரம்:

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியை பொறுத்தவரையில் ஆனந்தி, அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார் ஆகியோர் அடுத்தடுத்து எவிக்சன் முறையில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

டபுள் எவிக்சன் உறுதி:

தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்ய்யப்படும் நிலையில், இன்று டபுள் எவிக்சன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விஜய் டிவியில் வெளியாகியுள்ள ப்ரோமோவில், "நாட்கள் குறைந்துகொண்டே இருக்கிறது, வீட்டில் ஆட்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கிறது. போகப்போக பாதைகளும் குறுகிவிடும். அதனால் 17 பேருக்கு இடம் போதவில்லை. இன்று 2 பேர் வீட்டில் இருந்து வெளியேறப்போகிறார்கள்" என தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசுகிறார். இதனால் இன்று முதல் டபுள் எவிக்சன் (Double Eviction) உறுதி செய்யப்பட்டுள்ளது. களநிலவரங்களின்படி சாச்சனா (Sachana Bigg Boss Tamil), ஆர்ஜே ஆனந்தி (RJ Anandhi Bigg Boss Tamil) இன்று வெளியேற்றப்படலாம் என தெரியவருகிறது. இவர்கள் இருவரும் விசமத்தனமான நபர்களாக கவனிக்கப்பட்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டபுள் எவிக்சன் குறித்து விஜய் சேதுபதி பேசிய ப்ரோமோ: