ஏப்ரல் 15, சென்னை (Cinema News): ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ரவி, தனது அருமையான நடிப்பால் ஜெயம் ரவியாக (Jayam Ravi) உருவெடுத்தார். தொடர்ந்து தன் அண்ணனுடன் பல்வேறு படங்களில் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில், பொன்னியின் செல்வனாக நடித்து அனைவரின் மனதையும் வென்றார். ஆனால் அதன் பின் வெளியான படம் எதுவும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

சொல்லப்போனால் நீண்ட காலமாக வெற்றி படத்தை கொடுக்காமல் உள்ளார். பூமி படத்தில் ஆரம்பித்த தோல்வி இறைவன், அகிலன் என்று அவரை படுத்தி எடுத்து வருகிறது. பொன்னியின் செல்வன் என்னதான் வெற்றி படமாக இருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்ததினால், அவரின் தனிப்பட வெற்றியாக அது பார்க்கப்படவில்லை. Ram Navami Ayodhya Mandir Guidelines: ராம நவமிக்கு தயாராகும் அயோத்தி ராமர்.. கோயிலுக்கு வருவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு..!

சைரன்: இந்நிலையில் ஜெயம் ரவிக்கு அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்கியராஜ் எழுதி இயக்கும் சைரன் (Siren) படமானது பிப்ரவரி 16ம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் (G. V. Prakash Kumar) இசையமைத்துள்ளார். சைரனில் தனது அதிரடி நடிப்பை இரு வேடங்களில் ஜெயம் ரவி காட்டிருப்பார். மேலும் கீர்த்தி சுரேஷ் தனது வில்லத்தனமான நடிப்பில் மிரட்டியிருப்பார். இப்படியான நிலையில் சைரன் படம் ஏப்ரல் 19-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.