TVK Party Recognition by ECI (Photo Credit: @tvkvijayhq / @TST_Offcl X)

செப்டம்பர் 08, சென்னை (Chennai): எதிர்வரவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில், தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அரசியல்கட்சி தொடங்கி, தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதாக நடிகர் விஜய் (TVK Vijay) சமீபத்தில் அறிவித்து இருந்தார். அதனைத்தொடர்ந்து, அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல்கட்சியை தொடங்கி, அதனை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்திற்கும் அனுப்பி வைத்திருந்தார். இதனிடையே, இன்று விஜயின் த.வெ.க (Tamilaga Vettri Kazhagam TVK) தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை விஜய் தனது அறிக்கை வாயிலாக தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அனுமதி கிடைத்தது:

இதுகுறித்த விஜய்யின் அறிக்கையில், “பிறப்பொக்கும்‌ எல்லா உயிர்க்கும்‌” என்கிற அடிப்படைக்‌ கோட்பாட்டோடு நாம்‌ அரசியலை அணுகுவதும்‌ ஒருவிதக்‌ கொள்கைக்‌ கொண்டாட்டமே. எனினும்‌ முழுமையான கொண்டாட்டத்திற்காகவும்‌, அரசியல்‌ கட்சிக்கான சட்டப்பூர்வமானப்‌ பதிவுக்காகவுமே நாம்‌ இதுவரை காத்திருந்தோம்‌. இப்போது அதற்கான அனுமதியும்‌ கிடைத்துவிட்டது. தமிழக வெற்றிக்‌ கழகத்தை அரசியல்‌ கட்சியாகப்‌ பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம்‌ 2ஆம்‌ தேதி இந்தியத்‌ தேர்தல்‌ ஆணையத்திடம்‌ விண்ணப்பித்திருந்தோம்‌. Tamilaga Vettri Kazhagam: த.வெ.க-வின் முதல் மாநாட்டுக்கு விக்கிரவாண்டி காவல்துறை அனுமதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

மாநாடு தேதிக்காக காத்திருங்கள்:

அதைச்‌ சட்டப்பூர்வமாகப்‌ பரிசீலித்த நமது நாட்டின்‌ தேர்தல்‌ ஆணையம்‌, தற்போது நம்‌ தமிழக 6வற்றிக்‌ கழகத்தை ஓர்‌ அரசியல்‌ கட்சியாகப்‌ பதிவு செய்து, தேர்தல்‌ அரசியலில்‌, பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப்‌ பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதீல்‌ பெருமகிழ்ச்சி அடைகிறேன்‌. திசைகளை வெல்லப்‌ போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத்‌ திறந்திருக்கிறது. இச்சூழலில்‌, நமது கழகத்தின்‌ கொள்கைப்‌ பிரகடன முதல்‌ மாநில மாநாட்டிற்கான ஆயத்தப்‌ பணிகள்‌ தொடங்கியுள்ள நிலையில்‌ அதுகுறித்த அதிகாரப்பூர்வ ௮றிவிப்பு வரும்வரை காத்திருங்கள்‌.

இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்:

தடைகளைத்‌ தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம்‌ ஏந்தி, தமிழக மக்களுக்கானத்‌ தலையாய அரசியல்‌ கட்சியாகத்‌ தமிழ்நாட்டில்‌ வலம்‌ வருவோம்‌. வெற்றிக்‌ கொடியேந்தி மக்களைச்‌ சந்தீப்போம்‌!" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் த.வெ.க கட்சியின் மாவட்ட, நகர, பேரூர் நிர்வாகிகள் பலரும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இனிப்புகள் வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்.

த.வெ.க அங்கீகரித்ததை அதிகாரபூர்வமாக அறிவித்த நடிகர் விஜய்: