Vaazhai (Photo Credit: Instagram)

செப்டம்பர் 26, சென்னை (Cinema News): மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான ‘வாழை’ இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை 'ரெட் ஜெயன்ட்' நிறுவனம் வெளியிடுகிறது. டிஜிட்டல் உரிமத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) வாங்கியது. IIFA Utsavam 2024 in UAE: ஐஐஎஃப்ஏ விருது விழா 2024.. உலக அழகி முதல் ஆண்டவர் வரை.. கலந்துகொள்பவர்களின் முழு லிஸ்ட் இதோ.!

மாரி செல்வராஜ் பல இடங்களில் பேசுகையில், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள வேம்பு கதபாத்திரம், எனது சிறு வயதில் வாழைத் தார் சுமக்கும் வேலைக்குச் சென்று விபத்தில் இறந்து போன எனது அக்காவின் கதாபாத்திரம், இது எனது வாழ்வியல் படம் என குறிப்பிட்டிருந்தார். வாழை படத்தினைப் பார்த்த இயக்குநர் பாலா, மாரி செல்வராஜைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இந்த படத்தின் கதைக்களத்தை கண்ணீர் விட்டு மக்கள் பாராட்டி இருந்தனர். மேலும் இப்படம் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, சுமார் 15 முதல் 20 கோடி வரை வசூல் செய்தது.

ஓடிடி ரிலீஸ்: இதையடுத்து சமீபத்தில் படக்குழிவினர் 25 ஆவது நாள் வெற்றி விழாவைக் கொண்டாடினர். இப்போது ஓடிடியில் இந்த படத்தை பார்க்க ஏதுவாக டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வருகின்ற அக்டோபர் 11 ஆம் தேதி வாழை படம் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இதனால் படத்தை பார்க்காதவர்கள் மட்டுமல்ல மீண்டும் வாழை படத்தை பார்க்க நினைப்பவர்களும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

வாழை ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு:

 

View this post on Instagram

 

A post shared by Disney+ Hotstar Tamil (@disneyplushotstartamil)