ஜூலை 15, சென்னை (Cinema News): பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'குக் வித் கோமாளி' ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. ஐந்து சீசன்களை கடந்து, தற்போது 6வது சீசனில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நடப்பு சீசனில் போட்டியாளர்களாக பிரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன், ஷபானா ஷாஜகான், கஞ்சா கருப்பு, சௌந்தர்யா, மதுமிதா, உமைர் லத்தீப், ராஜு, மெரினா கடற்கரையில் உணவகம் நடத்தி வரும் சுந்தரி அக்கா, ஐடி விவசாயி நந்தகுமார் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். லிங்கை தொட்டதும் தூக்கிட்டாங்க.. தமிழ் நடிகருக்கு வாட்ஸ்அப்பில் வந்த ஆப்பு.. மக்களே கவனம்.!
குக் வித் கோமாளி சீசன் 6 (Cook With Comali Season 6):
நடுவர்களாக தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் உடன் புதிய நடுவராக சீசன் 6இல் கௌஷிக் என்ற நடுவரும் இணைந்துள்ளார். கடந்த சீசன்களை போல் இல்லாமல் இம்முறை ஸ்கோர் போர்டு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 வாரங்கள் சமையல் போட்டி நடக்கும். அதில், மதிப்பெண்களை வைத்து 3வது வாரம் குறைவான மதிப்பெண் எடுத்தவர்களை போட்டியிலிருந்து வெளியேற்றும் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதன்படி சௌந்தர்யா, முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டார். தொடர்ந்து, 2வதாக கஞ்சா கருப்பு எலிமினேட் செய்யப்பட்டார்.
சுந்தரி எலிமினேட்:
இந்நிலையில், அடுத்த 3 வாரங்களில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில், சுந்தரி (CWC S6 Sundari) கடைசி இடத்தை பிடித்திருந்தார். இந்த வாரம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை கொண்டு சமைக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில், சுந்தரி அவர்கள் மதிப்பெண்கள் குறைவாக பெற்று, 3 வாரங்கள் எடுத்த மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் எலிமினேட் செய்யப்பட்டார். அப்போது, “இதில் வெற்றியை தோல்வி என்று எதுவுமே இல்லை. இந்த மேடை என் வாழ்க்கையை மாற்றி விட்டது. நான் இதற்காக நன்றி சொல்கிறேன்” எனக் கூறி கண்ணீருடன் விடை பெற்றார்.