Baahubali (Photo Credit: Youtube)

மே 10, சென்னை (Cinema News): இயக்குநர் ராஜமெளலி (SS Rajamouli) இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாகுபலி’ (Baahubali). பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்திருந்த இத்திரைப்படம் இந்திய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை ஈட்டியது. இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். மேலும் இந்த படம் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என்பது மட்டுமல்ல உலக அளவில் அதிக வசூலை குவித்த படமும் ஆகும்.

இந்நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்துக்காக, ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ என்ற பெயரில் அனிமேஷன் வெப் தொடர் உருவாகியுள்ளது. இது வரும் 17-ல் வெளியாக உள்ளது. இதை கிராஃபிக்ஸ் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி, ஹைதராபாத்தில் நடந்தது. Sri Lanka Presidential Election 2024: இலங்கையில் அதிபர் தேர்தல்.. எப்போது நடைபெற உள்ளது?.!

பாகுபலி 3: அதில் லந்துகொண்ட இயக்குநர் ராஜமெளலி கூறும்போது, “பாகுபலி படத்துக்கு எப்போதும் என் மனதில் இடம் உண்டு. அதன் புரமோஷனுக்கு அதிகம் செலவழித்ததாகச் சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. மொத்த பணத்தையும் படத்தின் தயாரிப்புக் காகவே செலவழித்தோம். பாகுபலி 3-ம் பாகம் எப்போது உருவாகும் என்று கேட்கிறார்கள். ‘ஆர்ஆர்ஆர்’ படம் முடிந்ததுமே அதை தொடங்கி இருக்க வேண்டும். தள்ளிப் போய் விட்டது. கண்டிப்பாக ‘பாகுபலி 3’ (Baahubali 3) படம் உருவாகும். பிரபாஸுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார்.