ஜூலை 17, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் இயக்குனர் பாலா இயக்கத்தில், நடிகர் அதர்வா நடித்து வெளியான திரைப்படம் பரதேசி. இப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. இவர் மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில், சிறந்த நடிப்பிற்காக ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றார். இதனைத் தொடர்ந்து கூத்து, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். லிங்கை தொட்டதும் தூக்கிட்டாங்க.. தமிழ் நடிகருக்கு வாட்ஸ்அப்பில் வந்த ஆப்பு.. மக்களே கவனம்.!
நடிகை ரித்விகா நிச்சயதார்த்தம் :
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவான நிலையில் லெவன், தீபாவளி போனஸ் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்னதாக நடிகை ரித்விகாவிற்கும், வினோத் லக்ஷ்மணன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தனது நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ரித்விகா "கைத்தலம் பற்ற" Engaged என குறிப்பிட்டுள்ளார். நடிகையின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், ரசிகர்கள் பலரும் லைக் செய்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ரித்விகாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் :
View this post on Instagram