
ஜூன் 28, மும்பை (Cinema News Tamil): பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஷெஃபாலி ஜரிவாலா. இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு கான்டா லகா கேர்ள் என்ற பாடலில் நடித்து பிரபலமடைந்த நிலையில், இவரின் சிஸ்லிங் ரீமிக்ஸ் பாப் வீடியோ பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின்னர் முஜிசே ஷாதி கரோங் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிக்பாஸ் 13 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். மேலும் நாச் பாலியேவின் சீசன் 5 மற்றும் 7 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
திடீர் மாரடைப்பு :
இந்த நிலையில் அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று மும்பையில் தனது வீட்டில் இருந்தபோது நடிகைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உடனடியாக அவரது கணவர் பராக் தியாகி அந்தேரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், 47 வயதேயான நடிகை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மரணம் திரையுலகத்தினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை ஷெஃபாலி ஜரிவாலா மாரடைப்பால் மரணம் :
View this post on Instagram