
மார்ச் 25, சென்னை (Cinema News): நடிகரும், பிரபல கராத்தே மாஸ்டருமான ஷிஹான் ஹூசைனி (வயது 60), 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான அவர், நடிகர் விஜயின் 'பத்ரி' படம் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார். இவர், சுமார் 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். KL Rahul Blessed with Baby Girl: கிரிக்கெட்டர் கேஎல் ராகுல் - நடிகை அதியா தம்பதிக்கு பெண் குழந்தை; குவியும் வாழ்த்துக்கள்.!
பிரபல கராத்தே மாஸ்டர் மரணம்:
இந்நிலையில், சமீப காலமாகவே அரிய வகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஷிஹான் ஹூசைனி (Shihan Hussaini), அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) அதிகாலை 1.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்தை அறிந்த திரையுலகத்தினர் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கினர். முன்னதாக, ஷிஹான் ஹூசைனி தமது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.