மார்ச் 24, புதுடெல்லி (Sports News): இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், அதிரடி ஆட்டக்காரர் கேஎல் ராகுல் (KL Rahul). தற்போது ஐபிஎல் 2025 சீசனில், ராகுல் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டித் தொடரில் இந்தியா அணி வெற்றி பெற்ற நிலையில், கே.எல் ராகுலும் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தார். LSG Vs DC: டெல்லி அணிக்கு 210 ரன்கள் இலக்கு.. மார்ஷ், நிகோலஸ் பூரான் வெறியாட்டம்.. சரவெடி சம்பவத்தில் லக்னோ.! 

பெண் குழந்தைக்கு தந்தையான ராகுல்:

கே.எல் ராகுல் கடந்த 2023ம் ஆண்டு நடிகை அதியா ஷெட்டியை (Athiya Shetty) கரம்பிடித்தார். தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த நிலையில், அதியா கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில், கே.எல் ராகுல் - அதியா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி அணி சார்பில் களமிறங்கும் சில போட்டிகளில் அவர் பங்கேற்க இயலாது என தெரியவருகிறது. குழந்தையை பெற்றெடுத்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கே.எல் ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு குழந்தை பிறந்தது தொடர்பான அறிவிப்பு:

 

View this post on Instagram

 

A post shared by Athiya Shetty (@athiyashetty)