Singham Again Deepika Padukone Poster (Photo Credit: Twitter)

அக்டோபர் 15, மும்பை (Cinema News): கடந்த 2010ம் ஆண்டு சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ் ராஜ், ராதா ரவி, விவேக், விஜயகுமார் உட்பட பலரின் நடிப்பில், ஹரியின் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது சிங்கம் (Singam Tamil Movie). இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களும் வெளியாகின.

தமிழில் அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றியை தந்த சிங்கம் திரைப்படம், ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. கடந்த 2011ல் வெளியான சிங்கம் (Singham Hindi Movie) திரைப்படம் வடமாநிலங்களில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனால் தமிழைப்போலவே ஹிந்தியிலும் சிங்கத்தின் (Singham Series) அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின.

தற்போது சிங்கம் படத்தின் 4ம் பாகமான மீண்டும் சிங்கம் (Singham Again) படப்பிடிப்பு பணிகள் மும்மரமாக தொடங்கியுள்ளன. படம் 2024ம் ஆண்டு 15 ஆகஸ்ட் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்படத்தில் அஜய் தேவ்கன், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், கரீனா கபூர், அக்ஷய் குமார் உட்பட பல திரையுலக பட்டாளங்கள் நடிக்கின்றனர்.

இதனால் படம் ஹிந்தியில் பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தீபிகா படுகோன் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு லேடி சிங்கம் என பெயரிட்டு படக்குழு அவரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் வாயிலாக படம் மாஸ் ஆக்சன் காட்சிகள் கொண்டு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தீபிகா படுகோன் ஷாருக்கானின் பதான் திரைப்படத்தில் பாக். உளவாளியாக சிறப்பாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹிந்தியில் சிங்கம் எகைன் திரைப்படத்தை ரோஹித் ஷெட்டியே இயக்குகிறார். இவர்தான் முதல் 3 பாகத்திற்கும் இயக்குனர்.