செப்டம்பர் 15, லாஸ் ஏஞ்சல்ஸ் (Cinema News): லாஸ் ஏஞ்சல்ஸ் விழாவில் நெட்ஃபிளிக்ஸின் 'அடோலசென்ஸ்' தொடரில் நடித்ததற்காக, இங்கிலாந்தை சேர்ந்த 15 வயதான ஓவன் கூப்பர், எம்மி விருதை (Emmy Awards) வென்றார். இதன்மூலம், இளம் வயதில் எம்மி விருதை வென்ற நடிகர் என்ற 50 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 'அடோலசென்ஸ்' தொடருக்கு சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உட்பட 6 பிரிவுகளில் எம்மி விருதை வென்றது. 1973ஆம் ஆண்டு ஸ்காட் ஜேக்கபி, தனது 16 வயதில் தட் செர்டைன் சம்மர் படத்தில் நடித்ததற்காக எம்மி விருதை வென்றார். Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் 9 எப்போது?.. தேதி குறிச்சு வச்சிக்கோங்க.. அசத்தல் அப்டேட் கொடுத்த விஜய் டிவி.!
எம்மி விருது:
நகைச்சுவை நடிகர் நேட் பர்கட்ஸே தொகுத்து வழங்கிய எம்மி விருது வழங்கும் விழாவில், சிறந்த முன்னணி நடிகர் சேத் ரோஜென், சிறந்த முன்னணி நடிகை ஜீன் ஸ்மார்ட் மற்றும் சிறந்த துணை நடிகைக்கான விருதை ஹன்னா ஐன்பிண்டர் ஆகியோருக்கு வழக்கப்பட்டது. இந்த மூன்று முக்கிய விருதுகளை 'ஹேக்ஸ்' காமெடி தொடர் பெற்றது.