ஜூலை 14, பெங்களூரு (Cinema News): பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (Saroja Devi) வயது மூப்பு காரணமாக தனது 87 வயதில் காலமானார். 'கன்னடத்து பைங்கிளி' என அழைக்கப்படும் இவரது மறைவு தென்னிந்திய திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல், பெங்களூருவில் மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்துகின்றனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வலைதளங்களில் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். B Saroja Devi: பழம்பெரும் நடிகை 'கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி மறைந்தார்.. கண்ணீரில் திரையுலகம்.!
நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்:
பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி, இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் என நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார் இரங்கல்:
ஏராளமான நினைவுகள் என்னுள்ளே.. சரோஜா தேவியின் மறைவு குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். ஒரு உண்மையான ஸ்டார். பலருக்கு அவர் உத்வேகம். அவரின் அற்புதமான படைப்புகளுடன் எப்போதும் வாழ்ந்திருப்பார் என நடிகை ராதிகா சரத்குமார் இரங்கல் தெரிவித்தார்.