Feature Film Oscars Nomination 2025 (Photo Credit: @TheAcedamy X)

ஜனவரி 23, லாஸ் ஏஞ்சல்ஸ் (Cinema News): உலகளவில் திரைப்படைப்புகளுக்கு கிடைக்கும் அங்கீகாரமாக கருதப்படும், 97 வது ஆஸ்கர் அகாடமி விருதுக்கு, சர்வதேச அளவிலான திரைப்படங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, மார்ச் மாதம் 02ம் தேதி, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் டால்பி திரையரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. ஆஸ்கர் விருதுக்காக உலகளவில் உருவாக்கப்பட்ட திரைப்படைப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றில் படம், நடிகர், நடிகை, கதை, தொழில்நுட்பம், இசை, கலை என பல்வேறு பிரிவுகளில் படங்களுக்கும், அதற்கு உயிரோட்டம் வழங்கிய நபர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும். Thalapathy 69: தளபதி 69 படத்தின் முக்கிய அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரீட்.! 

தேர்வான படங்கள் லிஸ்ட்:

அந்த வகையில், 2024ம் ஆண்டு வெளியான படங்கள் இறுதி செய்யப்பட்டு பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அதில் சிறந்த படங்கள் பிரிவில் இந்திய படம் என்பது இடம்பெறவில்லை. இது இந்திய திரை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனோரா, தி புருட்டலிஸ்ட், ஏ கம்ப்ளீட் அன்னவுன், கான்கிளேவ், டியூன் இரண்டாம் பாகம், எலிமா பெர்ஸ், ஐ ஆம் ஸ்டில் ஹியர், நிகில் பாய்ஸ், தி சப்ஸ்டேன்ஸ், விக்டு ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து கட்டாயம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட கங்குவா இல்லை.

ஆஸ்கர் விருதுகளுக்கு இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்களின் விபரம் (Oscars 2025 Nominations):