ஜனவரி 23, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் (Vijay), தற்போது 2026 தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை (TN Assembly Election 2026) தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்ற கட்சியை தொடங்கி, அரசியலில் களமிறங்கி இருக்கிறார். தற்போது வரை 68 படங்களில் நடித்துள்ள விஜய், 69 வது (Thalapathy 69 Movie) திரைப்படத்தில் இயக்குனர் வினோத்துடன் கைகோர்த்து இருக்கிறார். மெர்சல் திரைப்படத்திற்கு பின்னர் தொடர் வெற்றியை பதிவு செய்து வந்த விஜய், தனது திரையுலகின் உச்சகட்ட பயணத்திற்கு இடைவெளி விட்டு அரசியலில் களமிறங்கி இருக்கிறார். Actor Vinayakan: "என்னால் கையாள முடியாத பல பிரச்சினைகள் உள்ளன" - குடிபோதையில் நிர்வாணமாக ரகளை செய்த ஜெயிலர் வில்லன் விநாயகன் மன்னிப்பு.!
தளபதி 69 திரைப்படம் (Thalapathy 69 Movie):
இயக்குனர் வினோத்தின் கைகோர்த்து உருவாகி வரும் திரைப்படத்தை, பெங்களூரை தலைமையிடமாக கொண்ட கேவிஎன் ப்ரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இப்படத்தில் விஜய், பூஜா ஹெட்ஜ், பாபி டியோள், கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, வரலட்சுமி சரத் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் இசையமைப்பு பணிகளை அனிரூத் மேற்கொள்கிறார்.
குடியரசு தினத்தில் அறிவிப்பு:
ரூ.300 கோடி செலவில் தயாராகும் தளபதி 69 திரைப்படம், அக். 2025 ல் வெளியாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விஜய் தீவிர அரசியல் பயணத்துடன், படப்பிடிப்பையும் எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், 26 ஜனவரி 2025 அன்று படத்தின் தலைப்பு, முதற்பார்வை தொடர்பான தகவல் வெளியாகலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.