செப்டம்பர் 21, மும்பை (Cinema News): நடிகர் பர்வின் தபாஸ் (Actor Parvin Dabas) இன்று (செப்டம்பர் 21) அதிகாலை எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் (Car Accident) சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். 50 வயதான தபாஸ், ப்ரோ பாஞ்சா லீக் இணை நிறுவனரும், ஹிந்தி திரைப்பட நடிகரும் ஆவார். டெல்லியில் பிறந்த இவர், சமீபத்தில் மேட் இன் ஹெவன் சீசன் டூ மற்றும் தாஹிரா காஷ்யப்பின் ஷர்மாஜி கி பேட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். Rajinikanth: "சகுனிகள் வாழும் சமுதாயத்தில்" - அரங்கத்தை அதிரவைத்த ரஜினியின் பேச்சு; வேட்டையன் இசை வெளியீடு விழாவில் சம்பவம்.!
இந்நிலையில், கார் விபத்துக்குப் பிறகு புறநகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டதாக பர்வின் தபாஸின் மனைவி ப்ரீத்தி ஜிங்கியானி தெரிவித்தார். பாந்த்ராவில் (Bandra) உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையில் அவர் உடல்நலம் தேறி வருவதாக அவரது மனைவி ப்ரீத்தி ஜிங்கியானி தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பான முழு விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை. இச்சம்பவம் அவரது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.