செப்டம்பர் 21, சென்னை (Cinema News): இயக்குனர் டிஜெ ஞானவேல் (TJ Gnanavel) இயக்கத்தில், லைகா (Lyca Productions) ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடித்து உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன் (Vettaiyan). இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சிறப்பு தோற்றத்தில் ஹிந்தி சூப்பர்ஸ்டாராக கவனிக்கப்படும் அமிதாப் பச்சனும் (Amitabh Bachchan) நடித்து இருக்கிறார். இவர்களுடன் பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.
அக்.10 வேட்டையன் தீபாவளி:
கடந்த மார்ச் 2023 ஆம் ஆண்டு ரஜினியின் 170வது திரைப்படமாக அறிவிக்கப்பட்ட வேட்டையனின் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், திருநெல்வேலி, சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் அதிரடியாக நடைபெற்று இருந்தன. படத்தின் இசையமைப்பு பணிகளை அனிருத்தும், ஒளிப்பதிவு பணிகளை எஸ்.ஆர் கதிரும், எடிட்டிங் பணிகளை பிலோமின் ராஜும் மேற்கொண்டுள்ளனர். இத்திரைப்படம் 10 அக்டோபர் 2024 அன்று உலகளவில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 160 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், தமிழ் மொழி மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. Parvathi Nair: நடிகை பார்வதி நாயரின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு; தேனாம்பேட்டை காவல்துறையினர் அதிரடி.. நடந்தது என்ன?.!
இசை வெளியீடு விழா:
இந்நிலையில், படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ரசிகர்கள் புடைசூழ பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், "மாஸ் ஹீரோக்களுக்கு ஏற்ப இயக்குனர்கள் இன்றளவில் இல்லை. ஒருபடத்தின் வெற்றிக்குப்பின் வெற்றிப்படம் கொடுப்பதை விடவும், தோல்விக்குப்பின் வெற்றிப்படம் கொடுப்பதே பெரிய நிலையாகிவிட்டது. எனக்கு ரோல் மாடல் அமிதாப் பச்சன் தான். அவர் படத்தில் நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 50 ஆண்டுகளாக என்னை திரையுலகில் ஜொலிக்கவைத்த ரசிகர்களுக்கு நன்றி.
சாதுர்யம் வேண்டும்:
சகுனிகள் வாழும் சமுதாயத்தில் சாதுர்யம், சாணக்கியத்தனம் என்பது வேண்டும். கெட்டவர்களிடம் இருந்தும் நாம் சில நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கு பணம் கொடுப்பதை விட குணத்தை கொடுங்கள். அதுவே அவர்களை உயர்த்தும்" என பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு விஐபி டிக்கெட் வாங்கி காத்திருந்த பல ரசிகர்கள், அரங்கம் நிரம்பிய காரணத்தால் வாசலிலேயே மறித்து அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், ரூ.1000 கொடுத்து வாங்கப்பட்ட டிக்கெட் கையில் இருந்தபோதும், உள்ளே செல்ல இயலாததால் அந்த பணம் வீணானது என குழந்தைகளுடன் வந்த நபர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி சென்றனர்.
வேட்டையன் படத்தின் டீசர் காட்சிகள் உங்களுக்காக: