Kota Srinivasa Rao (Photo Credit : @MaheshFanTrends X)

ஜூலை 13, விஜயவாடா ( Cinema News Tamil): தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வில்லன் கதாபாத்திரத்தில் 750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நடிகர் கோட்டா சீனிவாசராவ். தற்போது இவருக்கு 83 வயதாகிறது. தமிழில் சாமி திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்பாச்சி, சகுனி, கோ ஆகிய படங்களில் நடித்தும் வில்லனாக கவனம் பெற்றார்.

பத்மஸ்ரீ விருது :

திரையுலகில் மிகப்பெரிய சாதனைகளுக்கு சொந்தக்காரராகிய கோட்டா ஸ்ரீனிவாசராவை கௌரவித்து கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதும் வழங்கியது. கடந்த 1999 முதல் 2004 வரை விஜயவாடா கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். வயது மூப்பு காரணமாக தற்போது திரைப்படங்களில் நடிக்காமல் வீட்டிலேயே இருந்து வந்தவர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

திரையுலகினர் நேரில் அஞ்சலி :

அவரது உடலுக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு தெலுங்கு திரையுலகினரிடையே மிகப்பெரிய சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.