ஜனவரி 17, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh): வரும் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலில் பிரதிஷ்டை விழா (Ram Mandir Pranpratishtha) நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. PM Modi Blessing Newly Wedded Couple: பிரதமர் மோடி கேரளா வருகை... குருவாயூர் கோவிலில் உள்ள மணமக்களுக்கு ஆசீர்வாதம்..!
பாடகி சித்ரா வீடியோ: இதனைத் தொடர்ந்து ராமர் கோவில் திறப்பு அன்று, அனைவரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் பாடகி சித்ரா ராமர் (Singer KS Chithra) கோவில் குறித்த ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‛‛ஜனவரி 22ம் தேதி மதியம் 12.20 மணிக்கு அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது அனைவரும் ராமர் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். 'ஸ்ரீராம, ஜெயராம, ஜெய ராம' என்ற மந்திரகத்தை கூற வேண்டும். அதேபோல் அனைவரும் வீட்டில் ஐந்து திரி தீபம் ஏற்ற வேண்டும். மேலும் அனைவருக்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். லோக சமஸ்தா சுகினோ பவந்து' என்று கூறியுள்ளார்.